செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

நிறையை குறைத்தால் அதிக வட்டி

தென் கொரியாவைச் சேர்ந்த “ஹனா வங்கி' நாட்டிலுள்ள பருமனானவர்களின் தொகையைக் குறைக்க விநோத ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைறைப்படுத்தியுள்ளது.

இதன் பிரகாரம் தனது வங்கியில் பணத்தை வைப்புச் செய்துள்ளவர்கள் தமது நிறையை ஆண்டுக்கு 5 சதவீத அளவில் குறைத்தாலோ அன்றி தினசரி உடற்பயிற்சிகளில் ஈடுபட்டாலோ மேலதிக வட்டியை வழங்குவதாக ஹனா வங்கி அறிவித்துள்ளது.

தமது வைப்புகளுக்கு நிறையைக் குறைப்பதற்கான நன்மையளிக்கும் நிபந்தனையுடன் அதிகளவு வட்டியும் கிடைக்கும் என்பதால் பெருமளவானோர் “ஹனா வங்கியில் தமது வைப்புகளை ஆரம்பிக்க போட்டியிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பின் மூலம் ஹனா வங்கி சுமார் 50,000 வாடிக்கையாளர்களை தன் பால் கவர்ந்திழுத்து, 400 பில்லியன் வொன் (356 மில்லியன் அமெரிக்கடொலர்) வைப்பை பெற்றுள்ளது.

அதேபோன்று தென் கொரியாவைச் சேர்ந்த வேறு சில வங்கிகளும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பதற்கு புதிய அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

அந்நாட்டில் கடன் வழங்குவதில் பிரசித்தி பெற்ற கூக்மின் வங்கியானது, “ஸ்மார்ட் போன்' சேமிப்பு திட்டம் என்ற புதிய சேமிப்பு முறைமையை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.

இத்திட்டத்தின் பிரகாரம் நாளாந்த கோப்பி செலவை மிச்சப்படுத்த நினைக்கும் ஒரு வாடிக்கையாளர், தன்னிடமுள்ள கணினி வசதியுடைய கையடக்க தொலைபேசியில் “கோப்பி' என்ற குறியீட்டை அழுத்தினால் அதற்குரிய பணம் அவரது தன்னியக்க இயந்திர (ஏ.ரி.எம்.) அட்டையிலிருந்து அவரது சிறப்பு வைப்புக்கு சென்று விடும்.
அதேபோன்று வாடகைக் காருக்கான செலவை மிச்சப்படுத்தும் சமயங்களில் கையடக்க தொலைபேசியில் வாடகைக்கார் குறியீட்டை தெரிவு செய்தால் போதுமானதாகும்.

செலவைக் குறைத்து விசேட வட்டிக் கொடுப்பனவுடைய வைப்பில் சேரும் வாய்ப்பை தரும் இந்த திட்டத்துக்கு வாடிக் கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவுவதாக கூறப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல