செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

கொழும்பிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட திருமாவளவன்

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் பங்கேற்றச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கொழும்பு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

இறுதிச் சடங்கில் பங்கேற்க திருமாவளவன் இன்று காலை விமானம் மூலம் கொழும்பு சென்றார். அவரை வல்வெட்டித்துறைக்கு அழைத்துச் செல்ல தமிழ் தேச கூட்டமைப்பினர் விமான நிலையத்தின் வெளியே காத்திருந்தனர்.

இந் நிலையில் திருமாவளவனை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்த போலீசார், அவர் இலங்கைக்குள் நுழைய தடை விதித்திருப்பதாகக் கூறி, அடுத்த விமானத்திலேயே சென்னைக்கு திருப்பி அனுப்பினர்.

இலங்கையின் இந்தச் செயலை வன்மையாக கண்டித்துள்ள திருமாவளவன், இது இந்தியாவுக்கே அவமானம். இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல