வியாழன், 2 ஆகஸ்ட், 2012

விண்டோஸ் 8

விண்டோஸ் 8 இயங்க எத்தகைய ஹார்ட் வேர் அமைந்த கம்ப்யூட்டர் தேவையாய் இருக்கும்? இந்த கேள்வி நம் அனைவரின் மனதிலும் இருக்கும். இதற்கான பதில் மிகவும் எளியது. விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கும் அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 8 இயங்கும். கீழ்க்காணும் ஹார்ட்வேர் தேவைகளை இதற்கெனப் பட்டியலிடலாம்.


1. ப்ராசசரின் இயக்க வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ் அல்லது அதற்கும் மேலாக.

2.கம்ப்யூட்டர் 32 பிட் எனில் ராம் மெமரி 1 ஜிபி; 64 பிட் எனில் ராம் மெமரி 2 ஜிபி குறைந்தது இருக்க வேண்டும்.

3. எப்போதும் தேவையான காலி டிஸ்க் இடம், 32 பிட் எனில் 16 ஜிபி. 64 பிட் எனில் 20 ஜிபி.

4. டைரக்ட் எக்ஸ்9 கிராபிக்ஸ் டிவைஸ் WDDM 1.0 உடன் இருக்க வேண்டும். அல்லது இதனைக் காட்டிலும் உயர்வாக இருக்க வேண்டும்.

விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் சில வசதிகளைப் பயன்படுத்த, சில கூடுதல் ஹார்ட்வேர் தேவைகள் அவசியம். அவை, Snap feature பயன்படுத்த வேண்டும் எனில், உங்கள் கம்ப்யூட்டரின் ரெசல்யூசன் குறைந்த பட்சம் 1366x768 என இருக்க வேண்டும். நீங்கள் தொடுதிரை பயன்பாட்டினை மேற்கொள்வதாக இருந்தால், மல்ட்டி டச் ஏற்கக்கூடிய லேப்டாப், டேப்ளட் அல்லது டிஸ்பிளே திரை கொண்ட மானிட்டர் இருக்க வேண்டும். விண்டோஸ் 8 சிஸ்டம், ஒரே நேரத்தில் ஐந்து டச் பாய்ண்ட்களை இயக்கும் திறன் கொண்டது என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். விண்டோஸ் ஸ்டோர் பயன்படுத்த கட்டாயம் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.

வியப்பைத் தரும் விண்டோஸ் 8

மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் சோதனைத் தொகுப்பினை, சென்ற பிப்ரவரி 29 அன்று, நுகர்வோர்களுக்கு வெளியிட்டுள்ளது. வெளியான முதல் நாளே, பத்து லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இத்தொகுப்பு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பெற விரும்புபவர்கள் http://windows.microsoft.com/ enUS/windows8/download என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

தங்களிடம் உள்ள கம்ப்யூட்டரில் இந்த சோதனைப் பதிப்பினைப் பதிந்து இயக்க முடியுமா என்று அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்குப் பல இணைய தளங்கள் பதில் அளித்துள்ளன.

அவற்றில் http://news.cnet.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல