வியாழன், 2 ஆகஸ்ட், 2012

ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்கள்

ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் எனப் படுபவை விண்டோஸ் தன் இயக்கத்திற்கு எழுதி வைத்துக் கொண்டுள்ள சிறிய புரோகிராம்கள். இவற்றின் மூலம் விண்டோஸ், விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய வற்றின் சூழ்நிலையில் அப்ளிகேஷன்களை இயங்க வைத்திட முடியும்.
இவை ஜாவா ஆப்லெட் புரோகிராம்கள் போன்றவை. இவற்றால், புரோகிராம்களில் சிறிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இதுவே தீமைக்கும் வழி காட்டுகிறது. இப்படி மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதால், அந்த புரோகிராம்கள் வழியாக கெடுதல் விளைவிக்கும் வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் எளிதாக சிஸ்டத்திற்குள் நுழைய முடியும். இது போன்ற இடங்களை “drivebys” என அழைக்கின்றனர்.

மிகத் திறமைசாலியான வைரஸ் புரோகிராம் எழுது பவர்கள், இவற்றைப் பயன்படுத்தி உங்கள் கம்ப்யூட்டரையே அவர்கள் கட்டுப்பாட்டிற் குள் கொண்டு வர முடியும்.

அப்படியானால், இவற்றைக் கட்டுப்படுத்தவே முடியாதா? என நீங்கள் எண்ணலாம். இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை செயல் இழக்கச் செய்திடலாம். கண்ட்ரோல் பேனலில் Internet Properties சென்று சில செட்டிங்ஸ் மேற் கொள்ள வேண்டும். முதலில் கண்ட்ரோல் பேனல் செல்லவும். அங்கு “Network and Internet” என்ற விண்டோவிற்குள் செல்லவும். இதில் Internet Options பயன்படுத்தவும். இதில் கிடைக்கும் ஆப்ஷன்களில் “Manage Browser Addons” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது இந்த விண்டோ உங்களுக்குக் கிடைக்கும். இதில் தரப்படும் “Security” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.

இதில் நாம் நகர்த்தக் கூடிய ஒரு ஸ்லைடர் பார் கிடைக்கும். இதனை மேலும் கீழுமாக நகர்த்தினால், நம் சிஸ்டம் பாதுகாப்பு நிலையை செட் செய்திடும் அளவுகள் காட்டப்படும். நான் இதில் “mediumhigh” என்பதில் செட் செய்துள்ளேன். இதில் கூடுதலாக “High” என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். இதனைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. ஆனால் சில இணைய தளங்கள் சரியாக இயங்க மாட்டா.

இதைக் காட்டிலும் இன்னொரு எளிய வழி உள்ளது. உங்கள் கம்ப்யூட்டரில், தொடர்ந்து அப்டேட் செய்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் வைத்திருப்பீர்கள். மால்வேர் உள்ள தளங்களுக்கு நீங்கள் செல்ல முயற்சிக்கையில், இந்த தளம் தீங்கானது என்ற செய்தியைத் தரும். நம்மிடம் தான் நல்ல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் உள்ளதே, இந்த வைரஸைத் தடுத்துவிடுமே என்று எண்ணிக் கொண்டு, செல்லக் கூடாத இணைய தளத்திற்குள் செல்லக் கூடாது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல