வியாழன், 2 ஆகஸ்ட், 2012

ஜிமெயில் - Gmail

மெயில்களுடன் அட்டாச் செய்யப்பட்டு வரும் பைல்களை, டவுண்லோட் லிங்க்கில் கிளிக் செய்து, பின் டைரக்டரி அல்லது போல்டர் குறிப்பிட்டு டவுண்லோட் செய்திட வேண்டியுள்ளது. இதற்கு வேறு ஒரு வசதியை ஜிமெயில் அண்மையில் தந்துள்ளது.


(மற்ற எந்த மெயில் கிளையண்ட் புரோகிராமும் இந்த வசதியைத் தந்ததாகத் தெரியவில்லை.) இந்த புதிய வசதியினை ஜிமெயில் draganddrop என அழைக்கிறது. ஒவ்வொரு இணைக்கப் பட்ட பைலுக்கும், டவுண் லோட் என்பதில் கிளிக் செய்திடாமல், பைலின் மீது கர்சரைக் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, அந்த பைலை எங்கு சேவ் செய்திட வேண்டுமோ, அந்த ட்ரைவ் அல்லது போல்டரில் விட்டால் போதும்.

முன்பு ஜிமெயில், தன் மின்னஞ்சல்களில், பைலை அட்டாச் செய்திட இந்த வசதியைத் தந்தது. பைலின் மீது கர்சர் கொண்டு பிடித்து இழுத்து வந்து மெயிலில் விட்டுவிட்டால் போதும். பிரவுஸ் செய்து, பைலைத் திறந்து, அட்டாச் செய்திடும் வேலை எல்லாம் தேவையில்லை.

இன்றும் ஜிமெயிலே மக்களின் அபிமான மெயிலாக முதல் இடத்தில் உள்ளது என்றால், கூகுளின் தொடர்ந்த உழைப்பும், தன் வாடிக்கையாளர்களுக்கு வசதி தரும் வகையில், ஏதேனும் ஒரு புதியது ஒன்றைத் தந்து கொண்டிருக்கும் பழக்கமே ஆகும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல