புதன், 14 ஏப்ரல், 2010

13 வயது மணமகளை கட்டிவைத்து மணமகன் பாலியல் பலாத்காரம்

மாதிரிப்படம்: படத்திற்கும் கதைக்கும் எதுவித தொடர்பும் இல்லை

13 வயது மணமகள் ஒருவர், அவரது கணவரால் கட்டிவைக்கப்பட்டு பாலியல் வல்லு றவுக்குட்படுத்தப்பட்ட நிலையில் மரணமான சம்பவம் யேமனில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவலை மணமகளின் தாயாரான நிஜிமா அஹ்மட் (50 வயது) வெளியிட்டுள்ளார்.

எல்ஹாம் அஸி (Ilham Mahdi al Assi) என்ற மேற்படி மணமகள் மரணமடையும் தறுவாயில் தனது கணவர் அல் ஹிக்மி (Abed al-Hikmi 23 வயது) எவ்வாறு தன்னுடன் நடந்து கொண்டார் என்பதை விபரித்ததாக நிஜிமா குறிப்பிட்டார்.

திருமணமாகி நான்காவது நாளில் அதிகளவு இரத்தப் பெருக்கால் எல்ஹாம் அஸி மரணமானார். பொலிஸ் விசாரணைகளையடுத்து அல் ஹிக்மி பாலியல் ஊக்க மாத்திரைகளை உபயோகித்தமை தெரியவந்துள்ளது.
திருமணமான முதல் நாளிலேயே பாதிக்கப்பட்ட இளம் மணமகளை அவரது கணவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
மணமகளை பரிசோதித்த மருத்துவர்கள் 10 நாட்களுக்கு அவரை நெருங்க வேண்டாம் என அல் ஹிக்மிக்கு எச்சரித்துள்ளனர்.

இந் நிலையில் பாலியலுக்கு உடன்பட மறுத்த மனைவியை கட்டி வைத்து அல் ஹிக்மி பலாத்கா ரத்தைப் பிரயோகித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல