புதன், 14 ஏப்ரல், 2010

ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி

வீட்டு ஜன்னலுக்கு வெளியில் உள்ள மின்சார கம்பி மீது எச்சில் துப்பியவர், மின்சார ம் பாய்ந்து பரிதாபமாக பலியான சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

மும்பையைச் சேர்ந்தத முகமது என்பரே இவ்வாறு பலியானவராவார்.

சாதாரண நடவடிக்கையினால் ஏற்பட்ட இந்த விபரீதம் குறித்து தெரியவருவதாவது விரார் பகுதியிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் முகமது. புகையிலை போடும் பழக்கம் உடைய இவர் சமீபத்தில் ஓய்வுநேரத்தில் வீட்டில் இருந்தபோது புகையிலையை மென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி, குடிப்பதற்காக தேநீர் கொண்டுவந்தார். இதனால் வாயில் உள்ள எச்சிலை ஜன்னல் வழியாக வெளியே துப்பினார்.

இந்த எச்சில், ஜன்னலுக்கு கீழ் உள்ள மின்சாரக் கம்பி மீது விழுந்தது. இந்த மின்கம்பிகள், ரயில் போக்குவரத்துக்கு பயன்படும் உயரழுத்தமுள்ள மின்சாரத்தை தாங்கிச்செல்பவை. மேலும், ரயில் போக்கு வரத்துக்குப் பயன்படும் மின் கம்பிகளுடன் இணைக்கப்பட்டிருந்தன. இதனால், மின் கம்பி மீது எச்சில் துப்பிய முகமது மீது, எச்சில் வழியாகவே உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது.
இதனையடுத்து ஜன்னலுக்கு வெளியே, இழுக்கப்பட்ட முகமது கீழே விழுந்தார்.

பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில நேரங்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.

விரார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பம் குறித்து மகாராஷ்டிரா மின் வாரியம் மற்றும் “டாடா பவர்' நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில், ““உயர் அழுத்த மின்சாரம் பாயும் இந்தக் கம்பிகள், நீண்ட காலமாக இந்தப் பகுதியில் உள்ளன. ஆனால், சமீபத்தில் தான், ரயில்வே போக்குவரத்து செல்லும் இந்த இடத்திற்கு மிக அருகில் வீடுகள் கட்டப்பட்டன. ரயில் போக்குவரத்துக்கான மின்கம்பிகள் செல்லும் இடத்திற்கும், குடியிருக்கும் இடத்திற்கும், ஆறு அடிக்கும் சற்று அதிகமான இடைவெளி அவசியம். ஆனால், இங்கு குடியிருப்போர், இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. சாதாரணமாக எச்சில் துப்பும் போது, இதுபோல் மின்சாரம் பாய்ந்து இறப்பதற்கு வாய்ப்பு இல்லை.

துப்பப்படும் எச்சிலுக்கும், மின் கம்பிக்கும் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் எச்சில் துப்பினால், இது போன்ற அசம்பாவிதம் ஏற்படும்' என்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல