அவ்வாறு, இந்நகரில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக, 'குமாரி'யாக இருக்கும் சிறுமி சானிரா பஜ்ராச்சார்யா.இந்த சிறுமி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவது, இந்து மற்றும் புத்த மத பண்டிகைகளின் போது, அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் ஊர்வலம் வருவது ஆகியவற்றை செய்து வருகிறார்.
தற்போது இந்த சிறுமி, பருவமடையும் வயதை எட்டி விட்டதால், விரைவில்'குமாரி' என்ற நிலையில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இவர், வங்கித் துறை சார்ந்த படிப்பான, வணிக வியல் அல்லது கணக்குப் பதிவியல் ஆகியவற்றை கற்க விரும்புகிறார். இதுகுறித்து சானிரா பஜ்ராச் சார்யா கூறுகையில், 'நான் வணிகவியல் அல்லது கணக்குப் பதிவியல் பாடங்களை படித்து, வங்கித்துறையில் பணியாற்ற விரும்புகிறேன்' என்றார்.
பராம்பரியஉடை அணிந்திருக்கும் இவரது இரண்டுகண்களிலும் மை தீட்டியிருப்பதோடு, அவரது நெற்றியின் மையப் பகுதியில், மூன் றாவது கண் வரையப்பட்டுள்ளது. 'குமாரி' யாக தேர்வு செய்யப்படும் சிறுமி, மற்றவர்களுடன் சுதந்திரமாக பழக முடியாதபடி, சில கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, அவருக்கு, கோவிலில் தனியே பாடங்கள் கற்பிக்கப் பட்டன.
குமாரி'யாக இருக்கும் சானிரா, மிகவும் புத்திசாலி. கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுவ தோடு, அவருக்கு நல்ல நினைவுத் திறனும் உள்ளதாக, அவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் அபா அவாலே தெரிவித்தார்.'குமாரி'யாக தேர்ந்தெடுக்கப்படும் சிறுமிக்கு தற்போது, மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது. அவர் ஓய்வு பெறும் போது, அவருக்கு சிறு தொகை மட்டுமே வழங்கப்படும். அதன் மூலம் அவர், தரமான கல்லூரி ஒன்றில் கல்வி கற்பது என்பது சிறிது கடினமானது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக