மே 2009 இல் இந்தத் தீவில் தனி நாடுகோரி போராடிய விடுதலைப் போராளிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடைபெற்று முடிந்த போரில் ஆனையிறவு பிரதான பங்கை வகிக்கிறது.
இந்த யாழ்ப்பாண குடாநாட்டை, நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் இக்குறுகிய நிலப் பகுதியே இரு நிலப்பரப்புகளுக்கும் இணைப்பை உண்டாக்கும் பகுதியாகும்.
யுத்த முரண்பாடுகள் இலங்கையின் ஏனைய பகுதிகளிலிருந்து வட பகுதியை முற்று முழுதாக யுத்தத்தின் கடைசிக் காலம் வரை பிரித்து வைத்திருந்தது.
யாழ்ப்பாணத்துடன் இணைப்பை உண்டாக்கும் ஏ 9 பாதை பொது மக்களுக்காகத் திறக்கப்பட 7 மாதங்கள் எடுத்தன.
ஜனவரி மாதம் தொடக்கம் மக்கள் தொகை கட்டுப்படுத்த முடியாதளவிற்கு அதிகரித்திருந்தது.
நாகதீப விகாரையின் பிரதம குரு சாஸ்தி ரவெடி சிறீ விமலதேரோ கூறியதாவது, “வார இறுதியில் 200, 000 பேர் வரை இங்கு வருவார்கள். நாகவிகாரை யாழ்ப்பாணத்திற்கு அப்பாலுள்ள தீவொன்றில் உள்ளது. இப்பகுதியை வந்தடைய 20 நிமிட வள்ளப் பயணம் செய்ய வேண்டும்.
பொது மக்களிடையே ஏற்படும் தொடர்பாடல்கள் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கும் இடையிலான மனப் புண்களை ஆற்றுவதற்கு வழிவகுக்கும்'' “யுத்தம் இவர்களை சேரவிடாது தடுத்து வைத்திருந்தது. பொது மக்களிடையே தொடர்பாடல்கள் இருக்கவில்லை'' இதனை அவர் கூறினார்.
யாழ்ப்பாண ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் இதனை ஏற்றுள்ளார்.
““கடந்த 2 மாதங்களில் நூறாயிரக்கணக்கான மக்கள் வட பகுதியைத் தரிசித்துள்ளனர். இது நிச்சயமாக வட பகுதித் தமிழ் மக்களுக்கிடையேயும் தென்பகுதி சிங்கள மக்களுக்கிடையேயும் புரிந்துணர்வை வளர்க்கும்'' என்றும் அவர் கூறினார்.
ஏ 9 வீதிக்கு அருகாமையிலுள்ள யுத்தகால நினைவுச் சின்னங்களை அவர்கள் பார்க்கின்றனர்.
ஒவ்வொரு வார இறுதியிலும் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகிறார்கள்.
பல வாரங்களுக்கு முன்னரேயே ஹோட்டல்கள் பதிவு செய்யப்பட்டு விடும். மக்கள் தொகையினரிடமிருந்து பணங்கறக்க வர்த்தகர்கள் பல வழிகளைக் கையாளுகின்றனர். யுத்தத்தினால் அழிந்த வீடுகளைத் திருத்தி மிகக் குறைந்த வசதிகளுடன் வாடகைக்குக் கொடுக்கின்றனர்.
உணவகங்களும் கடைகளும் வார இறுதியில் நல்ல வருமானம் பெறுகின்றன.
இக்கால கட்டத்தில் பல இந்திய பேருந்துகள் தட்டு முட்டுப் பொருட்கள் நிரப்பப்பட்டு யாழ்ப்பாணத்திற்குள் ஒன்றன் பின் ஒன்றாக நுழைகின்றன.
ஆனால் மக்களுக்கிடையேயுள்ள இடை வெளியை அடைக்க பல நாட்கள் எடுக்கும்.
கடைத் தெருக்களில் விற்பனை செய்யும் பலருக்கு வாங்குவோரது பாஷை விளங்கு வதில்லை. விற்பனை செய்வோர் தமிழ் பேசுகின்றனர்.
அவர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் கலந்து சமாளிக்கின்றனர். சைகைப் பாஷையும் பேசப்படுகிறது.
“நாங்கள் நீண்ட காலம் பிரிக்கப்பட்டி ருந்ததனால் ஆரம்ப நிலையிலிருந்து பழக வேண்டியுள்ளது'' என்கிறார். வட மத்திய மாகாணத்தின் எப்பாவலவைச் சேர்ந்த சரத் ரத்தினசிறி.
சில தமிழ்க் கட்சிகளுக்கு சிங்கள மக்களது படையெடுப்புப் பற்றி ஆட்சேபனை இருப்பினும் இரு சாராரிடையேயும் பகையுணர்வு காணப்படவில்லை.
யாழ். வாசியான பத்மநாதன் சுயாந்தேரன் கூறியதாவது, ““தெற்கிலிருந்து மக்கள் வருவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம், இது வழமை நிலையைக் கொண்டுவர உதவும்'' யாழ்ப்பாணம் பல அழிவுகளைச் சந்தித்த பின்னர் இதனால் கிடைக்கக் கூடிய வருமானத்தைப் பற்றியும் சிலர் மகிழ் வெய்துகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் யுத்தத்தினால் அழிவடைந்த கட்டிடங்கள் உள்ளனவாயினும் வன்னியில் நிலைமை மிக மோசமானது.
அங்கு 2006 2009 வரை நடைபெற்ற யுத்தத்திற்குத் தப்பிய கட்டிடங்கள் ஒன்றுமேயில்லை.
ஐக்கிய நாடுகளின் கூற்றுப்படி 280, 000 புலம்பெயர்ந்த மக்களில் 190, 000 பேர் தமது கிராமங்களுக்குத் திரும்பியுள்ளனர்.
160, 000 வீடுகள் திருத்தப்பட வேண்டியுள்ளன.
ஆயர் சௌந்தரநாயகம் கூறுவதாவது, “முன்னர் இருந்ததிலும் பார்க்க இப்போது ·ன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
வீதிகளில் படையினர் உள்ளனர். ஆயினும் சோதனை நடவடிக்கை குறைவடைந்துள்ளது. யுத்த பிரசன்னம் நீக்கப்பட்டுள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பு குறைவடைந்து வருகிறது.''
ஐ.பி.எஸ்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக