புதன், 14 ஏப்ரல், 2010

திருநங்கைகளை கேலி செய்யாமல் ஊக்குவிக்க வேண்டும்

சேலத்தில் கடந்த 3 நாட்களாக சங்கமம் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மிஸ் இந்தியா 2010 தேர்வு நடந்தது. இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரா, கேரளா, மும்பை உள்ளிட்ட இடங்களை சேர்ந்த பல்வேறு திருநங்கைகள் கலந்து கொண்டனர். விதமான உடைகளில் வண்ணமயமாக கலந்து கொண்ட அழகிகள், நடுவர்களின் கேள்விகளுக்கு வித்தியாசமான பதில்களை கூறினார்கள். முடிவில் கேரளாவை சேர்ந்த சபீதா என்ற திருநங்கை வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2வது இடத்தை சேலம் மணிமேகலையும், 3வது இடத்தை ரம்யாவும் பிடித்தனர். வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு நடிகை சினேகா கீரிடம் அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.

அதன் பின்னர் சினேகா பேசுகையில், திருநங்கைகளுக்கு ஆதரவு குரல் கொடுத்தார். அவர் கூறுகையில், “எனக்கு திருநங்கைகளைப் பிடிக்கும். நான் மும்பையில் பிறந்தவள். நான் சிறுமியாக இருந்தபோது என் அம்மா, திருநங்கைகளை அழைத்து திருஷ்டி சுற்றிப் போடுவார்.

அவர்களை அழைத்து வந்து உபசரிப்பார்கள். குழந்தைகள் பிறந்தால் திருநங்கைகளை அழைத்து வந்து ஆசி வாங்குவார்கள். திருநங்கைகள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. அவர்களது தன்னம்பிக்கை எனக்குப் பிடிக்கும். சமுதாயத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் தரப்பட வேண்டும். அவர்களை நாம் கேலி பேசாமல் ஊக்கப்படுத்திட வேண்டும்” என்றார். சினேகாவின் இந்த பேச்சுக்கு திருநங்கைகள் பெரும் வரவேற்பு கொடுத்தனர். Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல