வெள்ளி, 18 ஜூன், 2010

8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நந்தியாலாவில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாம்பவி (வயது 8). இவர் தன்னை தேடிவரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.

இவரை அப்பகுதி மக்கள் கிருஷ்ணராக கருதி வழிபடுகிறார்கள்.

இந்நிலையில் ஆந்திர மக்கள் விழிப்புணர்வு அமைப்பு, மாநில குழந்தைகள் நல சங்கம் ஆகியவை மனித உரிமை ஆணைய தலைவர் சுபாஷன் ரெட்டியிடம் அளித்த மனுவில், சாம்பவிக்கு தற்போது 8 வயதாகிறது. அவரது பெற்றோர் சவுமி யாச்சாரி, உஷாராணி ஆகியோர் பள்ளிக்கு அனுப்பாமல் சாமியா ராக மாற்றி உள்ளனர்.

இதனால் அவர் கல்வியறிவு கிடைக்காமல் இருக்கிறார். மனித உரிமை ஆணையம் கல்வி உரிமை சட்டப்படி அவரை பள்ளிக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது பற்றி விசாரித்த சுபாஷன் ரெட்டி, இளம் சாமியார் சாம்பவியை உடனே பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இல்லை என்றால் கல்வி உரிமை சட்டப்படி அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல