Oprah Gail Winfrey
உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்து 11 பெருங்கோடீஸ்வரர்களில், 14 பேர் மட்டுமே பெண்களாக உள்ளனர் என, “போர்ப்ஸ்’ ( Forbes magazine) பத்திரிகை தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் வெளியாகும் “போர்ப்ஸ்’ பத்திரிகை, உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வர பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆயிரத்து 11 கோடீஸ்வரர்கள் (மில்லியனர்) உள்ளனர்; இவர்களில் 14 பேர் பெண்கள். இதில், ஒரு சிலர் தான் சுயமாகச் சம்பாதித்து முன்னேறியவர்கள் என இந்த பத்திரிகை தெரிவித்துள்ளது; மற்றவர்கள் கணவர், தந்தை, சகோதரர்கள் மூலம் இந்த அந்தஸ்தை பெற்றவர்கள். ”
டிவி’ சேனல்களில் ஒளிபரப்பாகும், “வின்ப்ரே’ நிகழ்ச்சியில் பிரபலமானவர் ஓப்ரா வின்ப்ரே( Oprah Gail Winfrey 56). அமெரிக்காவின் மிசிசிபி (Mississippi) மாகாணத்தில் ஏழைத் தாய்க்கு மகளாக பிறந்து, விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள பண்ணையில் வேலை பார்த்த போது, பாலியியல் கொடுமைக்கு உள்ளானவர் ஓப்ரா. “டிவி’ சேனல் மூலம் பிரபலமானவர். சொந்த முயற்சியால் ஓப்ரா கோடீஸ்வரராகியுள்ளதாக இந்த பத்திரிகை தெரிவிக்கிறது. தற்போது இவரிடம் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளது.
Harry Potter author JK Rowling
இதேபோல, “ஹாரி பாட்டர்’ கதைகள் மூலம் உலக பிரசித்தி பெற்றவர் இதன் நூலாசிரியர் ராவ்லிங்(JK Rowling 44). இவரிடம் தற்போது 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. இவரது ஹாரி பாட்டர் கதை புத்தகங்கள், 65 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
Wu Yajun
சீனாவைச் சேர்ந்த வூ யாஜுன் (Wu Yajun, 44) என்ற பெண், ரியல் எஸ்டேட் மூலம் உலக கோடீஸ்வரராகியுள்ளார். இவர் சுய முன்னேற்றத்தால் தான் இந்த நிலையை எட்டியுள்ளார். இவரிடம் தற்போது 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. இருப்பினும், கோடீஸ்வரர்களின் பட்டியலில் இவர் 232வது இடத்தை வகிக்கிறார். 14 கோடீஸ்வரிகளில் ஏழு பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் சிலரது விபரங்கள்:
Xiuli Hawken
இவர் 400 வது இடத்தை வகிக்கிறார்
Chu Lam Yiu
இவர் 463 வது இடத்தை வகிக்கிறார்
Zhang Xin
இவர் 488 வது இடத்தை வகிக்கிறார்
Yan Cheung
இவர் 585 வது இடத்தை வகிக்கிறார்


.jpg)






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக