வெள்ளி, 18 ஜூன், 2010

பூனைக் குடும்பத்தை ஒரேயடியாக விழுங்கித் தீர்த்த நாய்க் குட்டிக்கு பிரிட்டனில் அவசரமாக சத்திர சிகிச்சை!

பூனைக் குடும்பத்தை ஒரேயடியாக விழுங்கித் தீர்த்த நாய்க் குட்டிக்கு அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. சினோய் என்று பெயருடைய இந்த நாய்க் குட்டி உணவு உண்பதைத் திடீரெனக் கைவிட்டு விட்டது. அதன் எஜமானர்கள் கவலை அடைந்தார்கள்.


அவர்களின் செல்லப் பப்பியை மிருக வைத்தியரிடம் அழைத்துச் சென்றனர். மிருக வைத்தியர் மருந்துகளை மாறி மாறிக் கொடுத்தும் கூடப் பலன் கிடைக்கவில்லை. அவர் அதன் வயிற்றை எக்ரே எடுத்துப் பார்த்தார். என்ன ஆச்சரியம்...?அதன் வயிற்றுக்குள் பிளாஸ்ரிக்கால் செய்யப்பட்ட ஐந்து பூனைகள் இருப்பதை எக்ஸ்ரே படத்தில் கண்டு கொண்டார். அதன் வயிற்றுக்குள் இருந்த பெரிய பூனைப் பொம்மையின் உயரம் இரு அங்குலம்.அகலம் ஒரு அங்குலம்.


இந்தப் பெரிய பொம்மையை எக்ஸ்ரே படம் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் காட்டியது. மிருக வைத்தியர் சத்திர சிகிச்சையை உடனடியாகவே மேற்கொண்டு ஐந்து பூனைப் பொம்மைகளையும் வெளியில் எடுத்தார். அவர் இச்செய்தியை நாயின் எஜமானர்களுக்குத் தொலைபேசியில் தெரிவித்தார். ஐந்து பூனைகளை நாயின் வயிற்றில் இருந்து மீட்டார் என்று கூறினார். அப்பாப் பூனை, அம்மாப் பூனை, மூன்று குட்டிப் பூனைகள் ஆகியவற்றை வெளியில் எடுத்தார் என்று சொன்னார்.

அப்போது நாயின் எஜமானர்கள் அவர்களின் செல்லப் பிராணி ஐந்து பூனைகளை உண்மையாகவே தின்றிருந்தது என்றே முதலில் ஆச்சரியம் அடைந்தனர். பின்னர்தான் அவை பூனைப் பொம்மைகள் என்பதை விளங்கிக் கொண்டனர். இனிமேல் அவர்களின் செல்ல பப்பி பூனைப் பொம்மைகளை விழுங்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்று அவர்கள் தெரிவித்தார்கள். நாய்க் குட்டி தற்போது தேறி வருகிறது.

இந்நாய்க்குட்டிக்கு வைத்தியம் செய்தமை ஒரு புதுமையான அனுபவம் என்று சத்திர சிகிச்சை மேற்கொண்ட மிருக வைத்தியர் தெரிவித்துள்ளார். அந்த நாய்க் குட்டியையும், பெரிய பூனைப் பொம்மையின் எக்ஸ்ரே படத்தையும், நாய்க் குட்டியின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட ஐந்து பொம்மைகளையும் படங்களில் காணலாம்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல