வெள்ளி, 18 ஜூன், 2010

தொலைக்காட்சித் தொடர் நாடகத்தில் எதிர்பார்க்கக் கூடியது?

சென்றகிழமை நாம் சுட்டிக்காட்டிய தமிழ்மக்கள் தொலைக்காட்சியின் (TVI) நிலையும் அதன் துணை நிறுவனங்களின் நிலையும் தற்போது புயலுக் குப்பின்னான அமைதியாகியிருக்கிறது.

இரண்டு புள்ளிகள் இங்கே இவை தொடர்பாக பேசிக்கொள்ள உகந்தவை. முதலாவது எமக்குத் தரப்பட்ட விமர்சனங்கள். இரண்டாவது இனி என்ன நடக்கலாம் என்பது.

கட்டுரை குறித்து ஆழ்ந்த விமர்சனங்களை பலரும் நேர்மையுடன் முன்வைத்தனர். பலர் பாராட்டினர். இதைப்போல பல வகை உண்டு.

நடுநிலையாளர்களால், தமிழ் மக்கள் அக்கறையாளர்களால் சொல்லப்பட்ட விமர்சனங்களில் குறிப்பாக ஒன்றுமட்டும் அதிகம் காணப்பட்டது. அது “உடைப்பது எளிது. கட்டியமைத்ததை
வழிநடத்திக் கொண்டு செல்லவேண்டும்” என்பதுதான் அது. அவர்களின் வாதத்திற்கு தலைவணங்குகின்றோம்.

ஆயினும் கடந்த கிழமை நாம் விவாதித்துக் கொண்டவற்றில், கட்டுரையில் எதையும் இல்லாமல் செய்யும் நோக்கம் எமக்கில்லை. உடைப்பது பற்றியும் இல்லை. நன்றாக கூர்ந்து வாசித்துப்பார்த்தால் தமிழ் மக்களின் நலன் கருதி தமிழ்மக்களின் ஊடகமாகிய TVI
இருந்து வந்துள்ளது. அது இனியும் பல ஆண்டு தொடர்ந்தும் இருக்கவேண்டும்
என்ற கருத்தே வலியுறுத்தப்பட்டது. இதுவரை யாரெல்லாம் TVI இல் தங்கள் உழைப்பை உரமாகவும்,நீராகவும், மண்ணாகவும் தன்னலமின்றி வழங்கி அதை வளர்த்த அதே பணியாளர்களுடன், தொண்டர்களுடன் TVI நீண்டு வளரவேண்டும் என்றே சொன்னோம். சொல்கிறோம்.

அந்தப் பணியாளர்கள் இனிமேலும் துன்பத்தில் உழலாமல் தங்கள் வாழ்க்கையை TVI இற்குள்ளால் நடத்திச் செல்லும் படியான நிலை வேண்டும் என்றே அழுத்தம் கொடுத்தோம்.

அதற்கு, TVI உடன் பின்பு வந்து சேர்ந்து கொண்ட CMR, CTR போன்றவை துணை நிற்கவேண்டும். அவையும் தமிழர் ஊடகம் என்ற வகையில் ஒரு குழுமமாக இயங்கி வந்தவை. இந்த மக்கள் ஊடகங்கள் சொத்துக்கள் நடந்து முடிந்திருப்பதுபோன்ற சிக்கல்
கல் இனிமேலும் வராமல் இருப்பதற்காக ஓர் பொதுமக்களால் கண்காணிக்கப்படும் அறக்கட்டளையினால் பராமரிக்கப்படவேண்டும் என்றோம். என்கிறோம். இந்த அறக்கட்டளையில் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான பலரை இணைத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் அறக்கட்டளையில் இருப்பாரானால் அவரது குடும்பமோ உறவினரோ, நெருங்கிய நண்பர்களோ TVI, CMR, CTR நிறுவனங்களில் பணியில் இருக்கவோ சேரவோ கூடாது என்ற
விதிகளுடன் இது இருக்வேண்டும்.(பரிசுக்குலுக்கல் அறிவிப்புக்களில் பார்த்திருப்பீர்களானால் இப்படிப்பட்ட வரிகள் நினைவில் இருக்கும். இலங்கையில் லக்ஸ் நடத்தும் போட்டியில்
இந்துஸ்தான் லீவரின் பணியாளரும்,அவர்களது உறவினரும் நண்பர்களும் பங்குபற்ற முடியாது என்றிருக்கும்.).

பங்குகளை வாங்குவதற்கும் ஒருவருக்கு 10 வீதத்துக்கு மேல் இருக்ககூடாது என்றும் பங்கு வாங்குபவர் அறக்கட்டளையின் உறுப்பினரின் உறவினரோ நெருங்கிய நண்பரோ என்று இல்லாதவாறு விதிகளை செம்மைப்படுத்தி அமைத்துக் கொண்டுமிகவும் நன்றாக காலா காலத்துக்கும் கனடாவில் இருக்கும் தமிழ்ச் சந்ததிக்கு உண்மையான சேவையாற்ற
ஏற்ற வகையில் இந்த TVI ஐயும் அதன் துணை நிறுவனங்களையும் திருந்தியமைக்கலாம்.

இதை மீறிய சுயநலம் மிக்க, தமிழர் சமூகத்திற்கு எதிரானவர்கள் தூக்கி எறியப்படவேண்டும்! இந்நிறுவனங்களுக்க இப்படி ஓர் இக்கட்டான நிலையை ஏற்படுத்தியவர்கள் தூக்கி எறியப்
படவேண்டும்.

ஆக, நாம் பிரிக்க நினைக்கவில்லை. சேர்க்கவே நினைத்தோம். கோர்க்கவே நினைத்தோம். மக்கள் என்ற மாலையில் ஓர் பூவாக, TVI ஐயும் அதன் நிறுவனங்களையும் கோர்க்கவே நினைத்தோம். தனிப்பட்ட ஒருவர் கோட்டில் சொருகியிருக்கும் பூவாகப் போய்வி
டாமல் தடுக்கவே நினைத்தோம்.

இதற்கிடையில்... என்ன நடக்கிறது இப்போது! தற்போது நடந்து முடிந்த கூட்டங்களில் இன்னும் 23 நாட்களுக்கு பொறுத்திருப்பது என்றும் (அதாவதுகடந்த கிழமை 30 நாட்கள் எனப்பட்டது) அதன்பிறகு ஆற அமர உணர்ச்சிமயப்படாமல் கதைப்பது என்று TVI பணியாளர்களால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இனி என்ன நடக்கவிருக்கிறது என்று எமது ஊகத்துக்கு வருபவை, செவிக்கு வருபவை நற்குறியாக இல்லை. TVI பணியாளருக்கு நலம் தரும் வகையில் இனிவரும் நடவடிக்கைகள் அமையுமா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

ஒரு தேர்தல் இந்த மாத இறுதியில் வருகின்றது- மக்களவைத் தேர்தல். இந்த அவையின் மிகவும் அவசரமானதும் அவசியமானதும் தேவை என்பது என்ன என்று யாருக்குமே தெரியாது. அது ஒருபக்கமிருக்க… இந்த மக்களவையை வைத்துக் கொண்டு பொம்மலாட்டம் ஆட சில சூத்திரதாரிகள் திட்டமிடுவதாகத் தெரிகிறது.

மக்களவையில் இளம் சந்ததியினர் பலரை தந்திரமாக இழுத்துப் போட்டிக்கு விட்டுள்ளதாகத் தெரிகிறது. (இந்த இளம் தலைமுறையினரின் எதிர்காலம்கனடாவில் கேள்விக்குறியாகவே இருக்கும். இவர்கள் பெயர்கள் உளவுத் துறையினரால் பட்டியலிடப்படும் என்பது தவிர்க்க முடியாதது)இவர்களிடையேயும் பல இடங்களில் போட்டியும் இருக்கப்போவதில்லை. இந்த நிலையில் பலர் ‘அண்ணப்போஸ்ரர்’ (நன்றி-சுறா படம்-வடிவேலு) ஆக வெற்றி பெறவே வாய்ப்பு உள்ளது. இப்போது இந்த இளம் சந்ததியினரை முன்நிறுத்தி அவர்களை வைத்துக்கொண்டு TVI அறக்கட்டளையை நிறுவ ஓர் ‘அமைப்பு’ முயற்சிக்கிறது. இதை ஏற்கும் மனநிலையில் TVI, CMR, CTR பணியாளர்கள் இல்லை என்றே தெரிகிறது.

உண்மையில் இப்படியான இக்கட்டான நிலைகைளைத் தடுக்க மக்களே உன்னிப்பாக அவதானித்து செயற்டபவேண்டும். TVI நிறுவனங்களை மக்கள் தங்கள் சொத்தாக கருதி அதனை இடித்துரைக்க வேண்டும். இவற்றை முறையான அறக்கட்டளைக்குள் கொண்டுவரவலியுறுத்தவேண்டும்.இங்கு சுட்டியது போல சில சின்னப் பிள்ளைகளைப் பலிக்கடாவாக்கி தங்களுக்குச் சொத்துச் சேர்ப்பதற்கும் அல்லது ‘அமைப்புக்களின்’ பெயரால்பிறரை ஏமாற்றுவதற்கும் வெளிக்கிடுபவர்கள் நிறுத்தப்படவேண்டும்.

இப்படியிருக்கையிலும் நம்பிக்கையூட்டக்கூடிய வகையில் பல வணிக விளம்பரங்கள் இந்தச் சிக்கலுக்குப் பின்பும் TVI க்கு வந்துள்ளன. வருகின்றன. மக்கள் TVI க்குப் பின்னால் நிற்கிறார்கள் என்பதே இதனால் தெரிகிறது! அதே போல தொடர்ந்தும் தங்கள்
தொலைக்காட்சியாக TVI மக்கள் நடத்திச் செல்லவேண்டும்.
எதிர்வரும் நாட்களில் இன்னும் இரண்டு கிழமைக்குப் பின்பு நடக்கவிருக்கும் சந்திப்புக்கு முன்பு….உருவாக்கப்படும் புரட்டலுக்கும் மிரட்டலுக்கும் தனியொருவர் அஞ்சலாம். பொதுமக்கள் அஞ்சுவார்களா? எப்போதும் மக்களை ஏமாளிகளாக்கிய, மிரட்டிய யாரும் உருப்பட்டிருக்கிறார்களா?

ஏன் இங்கு மிரட்டல் என்று குறிக்க வேண்டியிருக்கிறது? இப்போது மிரட்டல் படலம் தொடங்கிவிட்டது. பெரும் பொறுப்பில் இடம் பிடித்துக்கொண்ட ஒருவர் அண்மையில் ஓர் TVI பணியாளர் ஒருவரைத் தொலைபேசியில் மிரட்டியிருக்கிறார். அதுவும் ‘மிகவும் புத்திசாலியாய்’ தொலைபேசியில் செய்தி பதிந்து மிரட்டல் விட்டிருக்கிறார் என்றால் பாருங்களேன் இவர்களது அறிவையும் அடாவடித் தனத்தையும்?

இவர்களா நாட்டைப் பெற்றுத்தருவார்கள் என்று எதிர்பார்ப்பது?
இந்தக் கேள்விகளோடு… இன்னும் 3 கிழமைகளுக்குப் பின் இந்தச் சமூகநிறுவனம் பற்றியும் நிகழ்வுபற்றியும் மீண்டும் சிந்திப்போம்.

‘சுதந்திரன்’ வார இதழ் யூன் 11 - 17, 2010
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல