வியாழன், 28 அக்டோபர், 2010

ஆசிரியர்கள் அடித்ததால் 10 மாணவிகள் மயக்கம்

கம்போடியா நாட்டின் புனோவ் நகரில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் ஆண்டு தொடக்க விழாவுக்கான ஒத்திகை நடைபெற்றது. அப்போது, அடுத்தடுத்து 10 மாணவிகள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அவர்கள் அனைவருமே 14 முதல் 18 வயது வரையிலான மாணவிகள் ஆவார்கள். இதையடுத்து, 10 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மாணவிகளை ஆசிரியர்கள் கடுமையாக அடித்து துன்புறுத்தியதாலேயே மயக்கம் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், மாணவிகள் மயக்கம் அடைந்ததற்கான காரணத்தை டாக்டர்கள் உறுதியாக தெரிவிக்கவில்லை. தற்போது, அனைத்து மாணவிகளின் உடல்நிலையும் நன்றாக உள்ளது.

இதற்கிடையே பள்ளியின் தலைவர் லிம் சீ கூறுகையில், `பள்ளி ஆண்டு தொடக்க விழாவுக்காக ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் எதையும் நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. மயக்கமடைந்த மாணவிகளில் சிலருக்கு குளுக்கோஸ் சத்து குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது' என விளக்கம் அளித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல