வியாழன், 28 அக்டோபர், 2010

திருமணக்கோலத்தில் போலி மணமகள் கைது

போலி திருமண வைபவத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் 21 வயது மணமகளை பொலிஸார் மணக்கோலத்தில் கைது செய்த சம்பவம் பிரித்தானியாவில் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஷெபியல்ட் நகர மண்டபத்தில் 36 வயது ஆப்கான் மணமகனுக்கும் மேற்படி ஸ்லோவாக்கியா பெண்ணுக்கும் நடைபெற்ற திருமண வைபவத்தில் ஆஜராகிய பொலிஸாரும் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முவகர் நிலைய உத்தியோகத்தர்களும் மணமக்களையும் இரு விருந்தினர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
மணமகனான ஆப்கான் பிரஜை பிரித்தானியா வில் புகலிடம் கோரி நிராகரிப்புக்கு ஆளானவராவார்.

அவருக்கு பிரித்தானிய வதிவிட உமையை பெற்றுக்கொடுக்கும் முகமாகவே மேற்படி பெண் போலி திருமணத்தில் மணமகளாக பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் பிரித்தானிய எல்லை முகவர் நிலைய பேச்சாளர் ஒருவர் விரிபக்கையில், கடந்த கோடை காலத்தில் மட்டும் நாடளாவிய ரீதியில் 53 போலித் திருமணங்களை முறியடித்துள்ளதாகவும் இது தொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல