வியாழன், 28 அக்டோபர், 2010

காருக்குள் குழந்தையை தவிக்கவிட்ட தந்தை

அமெரிக்காவில் குடி போதையில் 3 வயது குழந்தையை 25 மணி நேரம் காருக்குள் தவிக்கவிட்டு சென்ற தந்தை கைது செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

கலிபோர்னியா மாகாணத்தின் பசடெனா நகரில் ஜோயி குரிஹரா (23) என்பவர், டைலன் என்ற தனது 3 வயது ஆண் குழந்தையுடன் காரில் வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீதியில் தகராறு புரிந்ததன் காரணமாக அவரை பொலிஸார் கைது செய்து அவரது போதை தெளியும்வரை அன்றிரவு மட்டும் அவரை பொலிஸ் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

மறுநாள் காலை கணவனும் மகனும் வீடு திரும்பாதைக் கண்ட மனைவி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். பொலிஸார் மனைவியிடம் "தங்களின் கணவன் தமது பாதுகாப்பில் இருக்கிறார்.. ஆனால் பிள்ளையைப்பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று கூறிய பொலிஸார் உடனே தமது பாதுகாப்பில் உள்ள கணவரிடம் விசாரித்துப் பார்த்தபோது அவர் சொன்ன பதிலால் பொலிஸாருக்கு தூக்கிவாரிப்போட்டது.

"இன்றுகாலை விழித்ததிலிருந்து நான் நேற்றுமாலை எனது காரை எங்கே பார்க் பண்ணினேன் என்பதுபற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். காருக்குள்தான் எனது மகன் இருக்கிறான்" என்று கூறியதைக்கேட்டு பொலிஸார் அதிர்ந்து போனார்கள்.

உடனே பொலிஸார் சுமார் 50 பொலிஸ் நாய்களுடன் சென்று தேடுதலில் ஈடுபட்டு சில மணிநேரங்களில் குழந்தை டைலனுடன் ஒரு பார்க்கிங் கராஜுக்குள் பார்க்கிங் செய்யப்பட்ட காருக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தையை காருக்குள் அஜாக்கிரதையாக விட்டுச் சென்ற குற்றத்திற்காக ஜோயி மீண்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்பட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல