வியாழன், 28 அக்டோபர், 2010

அழகான இலங்கை, குப்பை கூலங்களினால் அவலட்சணமாக காட்சியளிக்கிறது - ஜப்பானிய உல்லாச பயணி கருத்து

இலங்கை ஒரு அழகான நாடு. ஆனால் குப்பைக் கூளங்கள், அழகான நாட்டை அவலட்சணப்படுத்திக் கொண்டிருப்பதாக ஜப்பானிய நாட்டின் உல்லாசப் பயணிகளுள் ஒருவரான சசுக்கி மத்தசிங்வ கருத்துத் தெரிவித்தார்.

ஜப்பான் சர்வதேச நட்புறவுச் சங்கத்தினால் காலி மாநகருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 15 பேர்கள் அடங்கிய உல்லாசப் பயணிகள் குழுவை காலி மாநகர முதல்வர் மெத்சிறி டி சில்வா வரவேற்றார்.

காலி மாநகரைச் சுத்தம் செய்யும் மாபெரும் சிரமதானப் பணி, இங்கு மேற் கொள்ளப்பட்ட போது அதில் ஜப்பானிய குழுவைச் சேர்ந்த 15 பேரும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காலி மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் சசுக்கி மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, ஜப்பான் நாட்டுக்கும் இலங்கைக்குமிடையே மிக நீண்ட காலமாக உறவு இருந்து வருகிறது.

இலங்கையர்களைப் பற்றி உயர்ந்த கருத்துக்களும், மதிப்புகளும் ஜப்பான் மக்களுக்கிருக்கின்றன. இந்த நாடு அழகான நாடென்பது பற்றி அங்குள்ள மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

ஆனால் இந்நாட்டில் குப்பைக் கூளங்களும் நுளம்புத் தொல்லைகளும் அதிகரித்திருப்பதையும் டெங்கு நுளம்புகள் கூட இங்கு உற்பத்தியாகி வருவதையும் நாம் கண்டறிந்தோம்.

இவைகளுக்கு இடமளிக்கக் கூடாது. சுற்றுச் சூழல்கள் துப்புரவாக வைத்திருந்தாலேயே நாட்டின் அழகு மென்மேலும் மெருகூட்டப்படும். இதனால் நல்ல பெயர் நாட்டுக்குக் கிடைக்கும்.

ஜப்பான் நாடும் மிக அழகான நாடுதான்.

அங்கே குப்பைகளை அகற்ற நல்ல திட்டங்கள் இருக்கின்றன என்று அவர் தெவரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல