வியாழன், 28 அக்டோபர், 2010

3 வயது மகளை கத்தியால் குத்திக்கொன்று சடலத்தின் மீது அமிலத்தை ஊற்றியதாய்

தனது 3 வயது மகளை பல தடவைகள் கத்தியால் குத்தி அவளது உடலில் அமிலத்தை ஊற்றி பிரிந்தழிகைக்கு உட்படுத்திய தாயொருவர் தொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை பிரித்தானிய பர்மிங்ஹம் நகர நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எப்போதும் கற்பனையில் மூழ்கியிருக்கச் செய்யும் மனநலப் பாதிப்புக்குள்ளான இமான் ஓமர் யூஸுப் என்ற 25 வயது தாயே பெற்ற மகளான அலியா அஹ்மட் ஜமாவை இவ்வாறு கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட இமான் ஓமர் யூஸுப்பின் பராமரிப்பில் சின்னஞ்சிறு குழந்தையான அலியா அஹமட் ஜமா இருப்பது குறித்து இமான் ஓமர் யூஸுப்பின் தாயார் உள்ளூர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, பர்மிங்ஹாமிலுள்ள குறிப்பிட்ட வீட்டுக்கு இரு பொலிஸார் விஜயம் செய்த னர்.

அங்கு சென்ற பொலிஸாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

படுக்கையறை தரையில் உடல் முழுவதும் கத்திக் குத்துக் காயங்களுடன் தோல் கரைந்து உருகி எலும்புகள் வெளித்தெரியும் கோலத்தில் பிரிந்தழிகைக்கு உள்ளாகும் நிலையில் அலியாவின் சடலம் கிடந்தது.

சடலத்திலிருந்து அமில வாடை வருவதை பொலிஸார் உணர்ந்தனர்.

பிரேத பசோதனை அறிக்கைகளின் பிரகாரம் இமான் ஓமர் யூஸுப், தனது மகளை கத்தியால் குத்திக் கொன்ற பின் வெவ்வேறு தருணங்களில் குழந்தையின் உடலில் மீளவும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அலியாவின் உடலை பிரேத பசோதனைக்குட்படுத்திய கலாநிதி ஜேம்ஸ் லூகாஸ் விபரிக்கையில், குழந்தையின் உடல் மிக மோசமாக சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குழந்தையின் தோள், மார்பு, வயிறு என்பனவற்றில் வெவ்வேறு அளவிலான கத்திக்குத்து காயங்கள் காணப்படுவதாகவும் கூறினார்.

இந்நிலையில் இமான் ஓமர் யூஸுப் சமையல் அறை கத்தி உட்பட வெவ்வேறு கத்தி வகைகளை இந்தப் படுகொலைக்காக பயன் படுத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை பிறிதொரு தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல