குற்றச்செயல் இடம்பெற்ற சமயத்தில் பிரதிவாதியான இலங்கேஸ்வரனுக்கு 19 வயதாகும். கொழும்புக்கு வெடிபொருட்களைக் கொண்டு வந்ததை அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.1999 இல் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் 28 பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க காயமடைந்திருந்தார்.தீர்ப்பை வழங்கிய மேல்நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.எம்.பி.டி.வராவௌ, முன்னாள் ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவர் முயற்சித்தமை நிரூபணமாகியுள்ளதாகக் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டிருந்தால் நாடு பாரிய அனர்த்தத்துக்குள் தள்ளப்பட்டிருக்கும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.குண்டை வெடிக்கவைத்து பல உயிர்களைக் காவுகொள்ளச் செய்தமையை கவனத்தில் எடுத்து குற்றவாளிக்கு இத்தண்டனையை வழங்குவதாக நீதிபதி தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.
வியாழன், 28 அக்டோபர், 2010
சந்திரிகா கொலை முயற்சி வழக்கில் பிரதான குற்றவாளிக்கு 30 வருட கடூழியச்சிறை
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய சதிமுயற்சி செய்த குற்றச்சாட்டில் பிரதான குற்றவாளியாகக் காணப்பட்ட வவுனியா நாவல்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் இலங்கேஸ்வரனுக்கு 30 வருட கடூழியச் சிறைத்தண்டனையை கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை வழங்கியுள்ளது.
குற்றச்செயல் இடம்பெற்ற சமயத்தில் பிரதிவாதியான இலங்கேஸ்வரனுக்கு 19 வயதாகும். கொழும்புக்கு வெடிபொருட்களைக் கொண்டு வந்ததை அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.1999 இல் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் 28 பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க காயமடைந்திருந்தார்.தீர்ப்பை வழங்கிய மேல்நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.எம்.பி.டி.வராவௌ, முன்னாள் ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவர் முயற்சித்தமை நிரூபணமாகியுள்ளதாகக் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டிருந்தால் நாடு பாரிய அனர்த்தத்துக்குள் தள்ளப்பட்டிருக்கும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.குண்டை வெடிக்கவைத்து பல உயிர்களைக் காவுகொள்ளச் செய்தமையை கவனத்தில் எடுத்து குற்றவாளிக்கு இத்தண்டனையை வழங்குவதாக நீதிபதி தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.
குற்றச்செயல் இடம்பெற்ற சமயத்தில் பிரதிவாதியான இலங்கேஸ்வரனுக்கு 19 வயதாகும். கொழும்புக்கு வெடிபொருட்களைக் கொண்டு வந்ததை அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.1999 இல் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் 28 பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க காயமடைந்திருந்தார்.தீர்ப்பை வழங்கிய மேல்நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.எம்.பி.டி.வராவௌ, முன்னாள் ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவர் முயற்சித்தமை நிரூபணமாகியுள்ளதாகக் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டிருந்தால் நாடு பாரிய அனர்த்தத்துக்குள் தள்ளப்பட்டிருக்கும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.குண்டை வெடிக்கவைத்து பல உயிர்களைக் காவுகொள்ளச் செய்தமையை கவனத்தில் எடுத்து குற்றவாளிக்கு இத்தண்டனையை வழங்குவதாக நீதிபதி தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக