வியாழன், 28 அக்டோபர், 2010

யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 20க்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் நேற்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளனர்!

யாழ் நகரப் பகுதிகளிலும் யாழ் மாவட்டப் பகுதிகளிலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் 20க்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் நேற்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளை வானில் வந்தவர்களாலேயே இவர்கள் கடவுச்சீட்டு சகிதம் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிந்தியாவிலிருந்து சென்றுள்ள இந்த புடவை வியாபாரிகள் துவிச்சக்கர வண்டிகள் சகிதம் யாழ் நகரத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ் நகரின் கன்னாதிட்டிச் சந்தி மற்றும் அதனை அண்டிய விடுதிகளில் இவர்கள் நீண்ட காலமாக தங்கியிருந்து வர்த்தக் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அடிக்கடி இந்தியாவிற்கு சென்று வரும் இவர்கள் உடுபுடவைகள் சகிதம் திரும்பி வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது சகஜம்.புலிகளுக்கும் படையினருக்கும் சண்டை நிகழ்ந்த காலப்பகுதியிலும் இவர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலேயே இருந்தனர்.

இந்த நிலையிலேயே இவர்கள் நேற்று அதிகாலை வெள்ளை வானில் வந்த சிலரினால் இவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றனர். எனினும் இவர்கள் நீதிமன்றத்திலோ அல்லது காவற்துறையிடமோ ஆஜர்ப்படுத்தப்பட்டதாக தகவல்கள் எவையும் இதுவரை இல்லை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல