காலித் என்ற சிறுவனது குடும்பத்தினரும் ஹாலா என்ற சிறுமியின் குடும்பத்தினரும் விடுமுறையை கழிக்க துறைமுக நகரான லதாகியாவுக்கு சென்றபோதே சிறுவனும் சிறுமியும் முதன் முதலாக சந்தித்து கொண்டனர்.
இந்நிலையில் சிறுமியின் மீது கண்மூடித்தனமான காதல் கொண்ட காலித், ஊர் திரும்பியதும் சிறிய காதலி இல்லாமல் பாலர் பாடசாலைக்கு செல்லப் போவதில்லை என அடம்பிடித்துள்ளான்.
அத்துடன் தனக்கு ஹலாவை திருமணம் செய்து தருமாறு அவன் தனது தந்தை ஜுமாவிடம் கோரியுள்ளான்.
வேறு வழி தெரியாத ஜுமா ஹாலாவின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டார் .
இதன்போது ஹாலாவும் காலித் மீது அளவு கடந்த நேசம் கொண்டிருப்பதை அவர் அறிந்தார்.
காலித் பிரிந்து சென்ற பின் ஹாலா தனிமையில் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பதை கண்டு திகைப்படைந்ததாக ஹாலாவாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் மேற்படி இளம் காதல் ஜோடியை சேர்த்து வைப்பது என இரு குடும்பத்தினரும் முடிவெடுத்தனர்.
தொடர்ந்து காலித்துக்கும் ஹாலாவுக்கும் விமர்சையாக திருமண நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
காலித்துக்கு 15 வயதும் ஹாலாவுக்கு 13 வயதும் ஆகும் போது அவர்களுக்கு முறைப்படி திருமணம் செய்து வைக்க இரு தரப்பு குடும்பத்தினரும் தீர்மானித்துள்ளனர்.
சிரிய சட்டத்தின் பிரகாரம் திருமணம் செய்வதற்கு ஆண்களுக்கு குறைந்தது 18 வயதும் பெண்களுக்கு குறைந்தது 17 வயதும் ஆகியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் சிரியாவின் பின்தங்கிய கிராமப் பிரதேசங்களில் சட்டத்துக்கு புறம்பாக ஆண், பெண்ணுக்கு முறையே 15 வயது மற்றும் 13 வயதாகும்போது திருமணம் நடத்தப்படுவது வழமையாகவுள்ளது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக