இந்த வழக்கில் அமைச்சர் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளியென சென்னை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். சமீபத்தில் இந்தியா சென்ற அமைச்சரை கைது செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தேடப்படும் குற்றவாளி என அறிவித்ததை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பை நவம்பர் 2ஆம் திகதிக்கு வழங்கவுள்ளதாக எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அக்பல் அலி தெரிவித்துள்ளார் என இந்திய இணையத்தளங்கள் செய்து வெளியிட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக