வியாழன், 21 அக்டோபர், 2010

இலங்கை சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் கொல்லப்பட்டதாக சந்தேகம்

ஜோர்தானில் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர், கடமையாற்றி வந்த வீட்டு உரிமையாளரால்(பெண்) கழுத்து நெறிந்து கொல்லப்பட்டதன் பின் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்படுவதாக ஜோர்தான் தரப்பு இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜோர்தான் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் ஜோர்தான் தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து சட்டரீதியான தீர்வுகள் முன்வைக்கப்படுமென ஜோர்தான் தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், ஜோர்தானின் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பக்கபலமாக இருக்கும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும் இறந்ததாக சந்தேகிக்கப்படும் வீட்டுப்பணிப் பெண்ணின் விபரங்கள் ஏதும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல