வியாழன், 21 அக்டோபர், 2010

சண்டையில் ஜெயித்தால் தான் திருமணம் : குங் பூ சகோதரிகள் "கண்டிஷன்'

தங்களிடம் குங் பூ சண்டையில் ஜெயிக்கும் ஆணை தான் திருமணம் செய்து கொள்வோம் என, இரண்டு சீன இளம் பெண்கள் கண்டிஷன் போட்டு, சண்டையிடுவதற்காக மணமகன்களை தேடி வருகின்றனர். சீனாவை சேர்ந்த ஜியோ லின் (22), யென் (21) சகோதரிகள், குங் பூ கலை கற்றவர்கள். இவர்கள் இருவரும், "எங்களை குங் பூ சண்டையில் தோற்கடிக்கும் ஆணை தான் திருமணம் செய்து கொள்வோம்' என்று கூறி வருகின்றனர்.

இதற்காக,அவர்கள் திருமண தகவல் மையங்களில், பதிவு செய்துள்ளனர். இதுவரை, அவர்களிடம் சண்டையிட்ட ஆண்கள் அனைவரும், அவர்களிடம் தோற்று விட்டனர். லின் மற்றும் யென், தங்களிடம் போட்டியிட வரும் ஆண்கள் மூன்று கட்டங்களாக சண்டையிட வேண்டும் என்று கூறுகின்றனர். முதலில், வில் வித்தை போட்டியில் வெற்றி பெற வேண்டும். அடுத்ததாக, கனமான மூங்கிலாலான ஈட்டி சண்டையில் வெற்றி பெற வேண்டும். பின்னர், தங்களிடம் நேரடியாக சண்டையிட்டு, வெற்றி பெற்றதும், தங்களின் முகத்தை மூடியுள்ள திரையை விலக்கி, காதலை சொல்ல வேண்டும். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த விதத்தில், யாருமே அவர்களை வெற்றி கொள்ளவில்லை. போட்டிக்கு வரும் அனைவருமே எளிதாக தோல்வியைத் தழுவுகின்றனர்.

லின், யென் சகோதரிகள் கூறியதாவது: பண்டை காலத்தில், அரச குல பெண்கள் இத்தகைய முறையில் தான் திருமணம் செய்து கொள்வார்களாம். அதே முறையில், நாங்களும் திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். இதற்காக, திருமண தகவல் மையங்களில் பதிவு செய்தோம். எங்களுடன் போட்டிக்கு வரும் ஆண்கள், மிகவும் பலவீனமானவர்களாக இருக்கின்றனர். எளிதில், எங்களிடம் தோற்று விடுகின்றனர். எனினும், எங்களை வெற்றி கொள்ளும் ஆண்மகன் வருவான் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். இவ்வாறு சகோதரிகள் கூறினர்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல