வியாழன், 21 அக்டோபர், 2010

வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஹாஜ்முகமது (55). இவரது மனைவி ரஷ்யாபேகம் (50). இவர்களுக்கு சாகுல்பாட்ஷா (29), ஹக்கீம்பாட்ஷா (23), சபீன்தாஜ் (30) ஆகிய மூன்று பிள்ளைகள் உண்டு. ஹாஜ்முகமது கடந்த 30 ஆண்டாக வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். ஹாஜ்முகமது வெளிநாட்டில் இருந்தபோது தான் சம்பாதித்த பணத்தை இவரது மனைவி ரஷ்யாபேகத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த பணத்தில் ரஷ்யாபேகம் தனது பெயரில் இரண்டு ஏக்கர் நிலம், ஒரு பிளாட் வாங்கி அதில் வீடு கட்டினார். மீதி பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்ததாக தெரிகிறது.

கடந்த 25 ஆண்டுக்கு முன் லப்பைக்குடிக்காடு கிராமத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த இந்து மதத்தை சேர்ந்த ஒரு சிறுவனை ஹாஜ்முகமது தத்தெடுத்து அந்த சிறுவனை முஸ்லீமாக மாற்றி ஆரீப் என பெயரிட்டு தனது வீட்டிலேயே வளர்த்து வந்தார். கடந்த ஐந்தாண்டாக ரஷ்யாபேகத்துக்கும், வளர்ப்பு மகன் ஆரீப் (30)புக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன் ஹாஜ்முகமது வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பினார். ரஷயாபேகத்துக்கும், ஆரீப்புக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பை அறிந்த ஹாஜ்முகமது இருவரையும் கண்டித்தார். இதன்பின்னரும் ரஷ்யாபேகம் கள்ளக்காதலை விட மறுத்தார். இதனால் ஹாஜ்முகமது இதே கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக தனியாக வசித்து வந்தார். ரஷ்யாபேகம் தான் புதிதாக கட்டிய வீட்டை விற்பனை செய்ய ஏற்பாடு செய்து விட்டு வாடகை வீட்டில் குடியேற நேற்று காலை 8 மணியளவில் பாத்திரங்களை மூடையில் கட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த ஹாஜ்முகமது, ரஷ்யாபேகத்திடம், தான் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்பிய பணத்துக்கு வரவு செலவு கணக்கு சொல்லும்படியும், வீட்டை விற்றால் தனக்கு ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது, இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஹாஜ்முகமது, தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஷ்யாபேகத்தை குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ரஷ்யபேகத்தை இவரது உறவினர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். ரஷ்யாபேகம் மகன் ஹக்கீம்பாட்ஷா கொடுத்த புகாரின் பேரில், மங்கலமேடு இன்ஸ்பெக்டர் செல்வம், வழக்குப்பதிந்து ஹாஜ்முகமதுவை கைது செய்து விசாரிக்கிறார்.

Dinamalar
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல