வியாழன், 21 அக்டோபர், 2010

பாலியல் குற்றச்சாட்டின் பேல் சிறுவர் இல்ல நிர்வாகியான பாதியாருக்கு பிடியாணை

மன்னார் மாவட்டத்தின் முருங்கன் பகுதியில் உள்ள என் இரட்சகர் சிறுவர் இல்ல நிர் வாகியான என். அமிர்தலிங்கம் என்கிற பாதியாரை பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து மன்றில் ஆஜராக்க வேண்டும் என்று மன்னார் நீதவான் நீதிமன்றம் பிடி யாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார் மேலதிக நீதிவான் ஏ. யூட்சன் இப்பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள் ளார். இச் சிறுவர் இல்லத்தில்14 சிறுமியர் தங்கி இருந்தனர்.
பெரியகமத்தில் பாதிரியாரின் வீடு உள்ளது. சிறுவர் இல்லத்தில் தங்கி இருந்த சிறு மிகளில் ஒருத்தியை வேலைக்கு என அங்கு அழைத்துச் சென்ற போது பாதிரியார் அச்சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இச்சிறுமி மன்னார் மாவட்ட நன்னடத்தை அதிகாரிகளுக்கு இது குறித்து முறையி ட்டதையடுத்து அதிகாரிகளின் தொடர் விசாரணைகளை நடத்திய போது இன்னொரு சிறுமியும் பாதிரியால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகள் பாதியாருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் இவ்வழக்கு முதன் முறையாக அழைக்கப்பட்டது. அப்போதே பாதிரியாரை கைது செய்ய வேண்டும் என்றும் சிறுவர் இல்லத்தை மூட வேண்டும் என்றும் பாதிக்கப்பட் டவர்கள் என்று கூறப்படும் இரு சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்ப டுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். சிறுவர் இல்லமும் மூடப்பட்டது. பாதிரி தலை மறைவாகி விட்டமையால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. சிறுமிகள் 14 பேல் 08 பேருக்கு பெற்றோர் இருக்கின்றனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த எட்டுப் பேரும் நன்னடத்தை அதிகாரிகள் ஊடாக பெற்றோரிடம் கையளிக்கப்பட்டனர். ஆறு பேருக்கு பெற்றோர், பாதுகாவலர் கிடையாது.

எனவே இவர்களை மன்னார் நகரத்தில் உள்ள நம்பகத் தன்மை வாய்ந்த சிறுவர் இல்லத்தில் சேர்க்க வேண்டும்மென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் பொலி ஸார் பாதிரியாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல