வியாழன், 21 அக்டோபர், 2010

ஓரினச்சேர்க்கை (gay) இளவரசருக்கு 20 ஆண்டு ஜெயில், தண்டனை முடிவில் தஞ்சம் (படங்கள் இணைப்பு)

உதவியாளரை அடித்துக் கொன்ற வழக்கில் சவுதி இளவரசருக்கு லண்டன் கோர்ட்டு 20 ஆண்டு ஜெயில் தண்டணை அளித்து உள்ளது.


சவுதி அரேபிய இளவரசர் சையது அப்துல்லா பின் நசீர் அல் சையது (வயது 34). இவர் சவுதி அரேபிய மன்னரின் மகள் வழி பேரன் ஆவார். கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி லண்டனில் ஒரு நட்சத்திர ஓட்டலில் அப்துல்லா தங்கி இருந்தார். அப்போது தன்னுடைய உதவியாளரை அவர் அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தார்.

இளவரசர் அப்துல்லா ஓரின சேர்க்கையில் ஈடுபடுவர் என்பதும், தனது உதவியாளர் அதற்கு உடன்படாததால் அவரை கொலை செய்ததாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையே, சவுதி அரேபிய அரச குடும்பத்தின் செல்வாக்கை பயன்படுத்தி அப்துல்லாவை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் இங்கிலாந்து வெளியுறவுத் துறை விதிப்படி அப்துல்லா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபோன்று அப்துல்லா நடந்து கொள்வது முதல் முறை இல்லை என்றும், ஏற்கனவே ஒருமுறை அதிகமான மது போதையில் ஒருவரை தாக்கி உள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

20 ஆண்டுகள் ஜெயில்

தற்போது இந்த கொலை தொடர்பாக சவுதி இளவரசர் அப்துல்லாவுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டணை விதித்து, லண்டன் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

இதுபற்றி நீதிபதி டேவட் பீன் கூறுகையில், "கொலை வழக்கில் இளவரசர் ஒருவர் குற்றவாளியாக இருப்பது வழக்கத்திற்கு மாறாக உள்ளது. யார் குற்றம் செய்து இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்'' என்று தெரிவித்தார்.

சவுதிஅரேபியாவில், ஓரின சேர்க்கை என்பது மரண தண்டனைக்கான குற்றமாகும் இளவரசர் சையது அப்துல்லா சவுதிஅரேபியா சென்றால் அவருக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தண்டனை காலம் முடிந்து ஜெயிலில் இருந்து அவர் விடுதலையாகும்போது, இங்கிலாந்திலேயே தங்க அடைக்கலம் கேட்பார் என்று தெரிகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல