வியாழன், 21 அக்டோபர், 2010

இலங்கையில் அரசியல் கைதிகள் என யாரும் கிடையாது‐ அனைவரும் பயங்கரவாதிகள் ‐ டியூ. குணசேகர!

இலங்கையில் அரசியல் கைதிகள் என யாரும் கிடையாது. அனைவரும் பயங்கரவாதிகளாவர். சரத் பொன்சேகா அரசியல் கைதியல்ல என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை கள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் நிறைவு பெற்றதையடுத்து பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 11,696 உறுப்பினர்களில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் 4485 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கேட்போர் கூட த்தில் நேற்று முற்பகல் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இந்த விபரங்களை தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் விஜிதனி சொய்சா, புனர் வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரட்ணாயக்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ.ஆர். சில்வா, அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ். சதீஸ்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

சரணடைந்த புலிகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் நிறைவு பெற்றதைத்தொடர்ந்து புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 11696 பேர் (9441 ஆண்கள் 2,255 பெண்கள்) பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். இவர்களுக்காக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் புனர் வாழ்வு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. புனர்வாழ்வுத் திட்டம் ஆரம்பிக்கப் பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்த இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 4,485 பேர் (2,881 ஆண்கள் 1,604 பெண்கள்) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏனையவர்களில் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டவர்கள் தவிர எஞ்சிய அனைவரும் புலிகளுடன் வைத்திருந்த தொடர்புகளின் பரிமாணத்திற்கு தக்கவகையில் தொடர்ந்தும் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படுகி ன்றது. இதன் பின்னர் அவர்கள் காலக்கிரமத்தில் சமூகத்துடன் மீளிணைக்கப்படுவர் என்றார்.

விசாரணைக்கு முகங்கொடுத்துள்ளவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு ஏதேனும் கால வரையறையுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இது விடயத்தில் காலவரையறை எதனையும் தீர்மானிக்க முடியாது எனக்குறிப்பிட்டார்.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்பில் சர்வதேச சட்டத்தை மதித்து நடக்க இலங்கை தவறிவிட்டதெனவும் சுமார் எண்ணாயிரம் வரையிலான சந்தேகத்திற்கிடமான போராளிகள் வழக்கு விசாரணைகளின்றி மாதக்கணக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இது உலகிலேயே மிகப் பெரிய தடுத்து வைப்பாக அமைந்துள்ளதென சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியிருந்தது. இவர்களை அரசியல் கைதிகள் எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை நான் திட்ட வட்டமாக நிராகரிக்கின்றேன். அரசியல் கைதிகள் என யாரும் கிடையாது. அனைவருமே பயங்கரவாதிகளாவர். சரத் பொன்சேகா கூட அரசியல் கைதியல்ல மாறாக அவர் இலங்கை நீதிமன்றத்தால் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்ட தண்டனைக்குய கைதியாவார் என்றார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், சிறைச்சாலை மறுசீரமைப்பு பணிகள் குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப் படையில் மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போதுள்ள சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டமானது முழுமையாக திருத்தியமைக்கப்பட்டு புதிய சட்டம் 2011 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது. தற்போதுள்ள சிறைச் சாலைகள் கட்டளைச்சட்டம் 1867 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 130 ஆண்டு களுக்கும் மேலான பழைமை வாய்ந்ததாகும். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலப்பகுதி முதலாக இதுவரையில் மூன்று சிறு திருத்தங்களே இதில் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அந்தவகையில் தற்போது நவீன காலத்தின் தேவைகளை கருத்திற் கொண்டு புதிய சட்டம் கொண்டுவரப்பட வுள்ளது.

சிறைச்சாலைகளிலுள்ள நெருக்கடி நிலைமையே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பிரதான காரணமாக விளங்குகின்றமையால் சிறைச்சாலை நெருக்கடியைக் குறைப்பதற்கு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

11,000 கைதிகளையே வைத்திருப்பதற்கு போதுமான சிறைச்சாலைகளில் தற்போது சுமார் 30,000 பேர் வரையில் உள்ளனர்.

சிறைச்சாலை நெருக்கடியைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக ஜனாதிபதியின் பொது மன்னிப்பு மற்றும் அமைச் சரவை என்ற வகையில் எனக்குள்ள அதிகாரங்களின் கீழ் இதுவரையில் 3000 பேர் வரையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறிய தொகை தண்டப்பணம் செலுத்த முடியாத காரணத்தால் பெருந்தொகையானவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளனர். 500 ரூபா தண்டப்பணம் செலுத்த முடியவில்லை என்பதற்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் உள்ளனர்.
இத்தகையோரைப் பராமரிப்பதற்காக அரசாங்கம் நாளொன்றுக்கு 303 ரூபாவை செலவிடுகின்றது.

சிறைச்சாலைகளிலுள்ளவர்களில் நூற்று க்கு 40 வீதமானவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் அதனுடன் தொடர்புள்ளமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களாவர்.

போதையுடன் தொடர்புடைய குற்றச் சாட்டுக்களில் தண்டனை பெற்ற சிறைக் கைதிகள் அனைவரும் ஏனைய தண்டனை பெற்ற சிறைக்கைதிகளில் இருந்து வேறாக்கப்படவுள்ளனர், இவர்களுக்காக மூன்று புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன இது தொடர்பில் சட்டவிதிகள் பாராளுமன்றத்திலும் நிறை வேற்றப்பட்டுள்ளன.

இதனைத் தவிர தடுப்புக் காவலில் உள்ளவர்களையும் தண்டனை பெற்ற சிறை க்கைதிகளையும் வேறாக பிரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் கொழும்பு போன்ற நகர் பகுதிகளில் இருந்து இந்த புனர்வாழ்வு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.

ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளுடன் சிறையிலுள்ள தாய்மார்களுக்காக களுத்துறையில் புதிய புனர்வாழ்வு நிலையம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
இரண்டு வருடத்திற்கும் குறைவான தண்டனை பெற்றவர்கள் சமூக மையமாகக் கொண்ட புனர் வாழ்வு திருத்த நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

சிறைச்சாலைகளின் ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக தராதரம் பார்க்காமல் தவறிழைத்த அனைவர் மீதும் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் சிறைச்சாலைகளில் புதிய பாதுகாப்பு நடைமுறைகளும் ஸ்கானர் இயந்திரப் பயன்பாடு, கண்காணிப்பு கமரா பயன்பாடு போன்ற புதிய தொழில் நுட்பங்களும் பயன்படுத்தப்பட வுள்ளன.

தண்டனை நிர்ணயிக்கப்பட்ட சிறைக் கைதிகள் அனைவரும் கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களில் இருந்து வேறு இடங் களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட கைதிகள் மாத்திரமே விசாரணைகளுக்காக நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படுவதற்கு ஏதுவாக நகரங்களுக்கு அண்மையில் வைக்கப்பட்டிருப்பர். 2012 ஆம் ஆண்டில் பல்லே கலவில் புதிய திறந்தவெளி சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது.

விரைவில் சிறைச்சாலை மறுசீரமைப்புக் குழுவானது அதன் அறிக்கையை பூர்த்தி செய்யவுள்ளதுடன் அதன் இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவாகவே நடைமுறைப் படுத்தப்படும்.

நாட்டின் சனத்தொகையில் 25 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் வசிக்கின்ற அதே வேளை சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

பெறுமதியான இடங்களில் சிறைக் கைதிகளை வைத்திருப்பதால் உச்சப் பயன் பாட்டை பெறமுடியாதுள்ளது. வெலிக் கடைச் சிறைச்சாலை 40 ஏக்கர்களைக் கொண்டது. இதனை வர்த்தக நடவடிக்கைகாக வழங்குவதன் மூலமாக கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி சிறைச்சாலைகளை நவீன மயப்படுத்த முடியும்.

அதுமட்டுமன்றி, கொழும்பில் சிறைச் சாலைக்குள் இட நெருக்கடிக்கு மத்தியில் நசுங்கிக்கிடப்பதிலும் வேறு பிரதேசங்க ளில் சிறந்த சூழலில் சிறைக்கைதிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திதரும் எண்ணம் இருக்கிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல