அந்த இடங்களில் மாஅரைக்க பயன்படுத்தப்பட்ட அம்மிக்கற்கள் மற்றும் கையடக்க குழவிகள் கிடைத்துள்ளன.அவற்றின் மீது ஏதோ ஒரு வகை மாபடிந்திருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்ற வேர்க்கிழங்குகளை காயவைத்து அதனை மாவாக்க இந்தக் கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அவற்றை தண்ணீரில் கரைத்து சுடுகல்லில் அப்பம் போல் ஊற்றி சாப்பிட்டிருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகளில் இறைச்சி உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்களது உணவு வகைகளில் பெரும்பாலானவற்றில் இறைச்சி கலந்திருக்கும். ரொட்டி, பழம், காய்கறிகளை தவிர்த்துவிட்டு வெறும் இறைச்சியை மட்டும் சாப்பிடும் கும்பலும் உள்ளது. தற்போது குகைமனிதன் மா அப்பம் போன்ற தோசை வகைகளை சாப்பிட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு முன் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் மனிதன் மாவை கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அதற்கான ஆதாரங்கள் இஸ்ரேல் அருகே அடைத்திருந்தன.
தற்போது இந்த நம்பிக்கை தகர்க்கப்பட்டிருப்பதாக இந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக