திங்கள், 11 அக்டோபர், 2010

நுரையீரலில் வளர்ந்த மரம் (படங்கள் இணைப்பு)

ரஷ்ய நாட்டில், தீவிர நெஞ்சு வலியால் அவதியுற்ற 28 வயது இளைஞன் ஒருவரை, புற்று நோய் கட்டியை நெஞ்சில் இருந்து அகற்றும் நோக்குடன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்களுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அங்கு மனிதனின் நுரையீரலில் 5 செ. மீற்றர் மரம் வளர்ந்திருந்ததைக் கண்ணுற்ற அவர்கள் பெரிதும் வியப்புற்றார்கள்.

ரஷ்ய தேசத்திலுள்ள யுறேலஸ் நாட்டில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. அயோத்தியம் சிடாக்சின் என்னும் பெயரையுடைய இளைஞருக்கே டாக்டர்கள் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டிருந்தனர்.

சிடாக்கின் நெஞ்சில் தாங்கொணாத வலி இருந்ததாகவும் அடிக்கடி இரத்த வாந்தி எடுப்பதாகவும் டாக்டர்களுக்கு முறைப்பாடு செய்திருந்தார். அந்த முறைப்பாடு அடிப்படையில் அவருக்கு புற்று நோய் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தீர்மானித்து அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

சிகிச்சையின் போது நான் காண்பது நிஜம் தானா என எண்ணி என் கண்களை மூன்று முறை வெட்டி வெட்டி விழித்துப் பார்த்தேன். என டாக்டர் விடமின் கமஷேவ் பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். சிடொக்கின் முன்பு எப்போதோ இந்த தேவதாரு மரவிதையை விழுங்கியிருக்கின்றார். அது சுவாசப்பை வழியாக நுரையீரலில் இடம்பிடித்து வளர்ச்சியடைய ஆரம்பித்திருக்க வேண்டும் என டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர்.

நோயாளியின் நுரையீரலில் இருந்து 5 செ.மி கிளை அகற்றப்பட்டது. இரத்த வாந்தி எடுத்தது. அந்த மரத்தின் கிளைகள் குருதிக் குழாயை துளைத்துக் கொண்டு வளர்ந்தபடியினால் தான் அது ஏற்பட்டது. இருப்பினும் ஒரு பெரிய பிற பொருள் என் நெஞ்சில் இருப்பதாக நான் நினைக்கவில்லை என சிடாக்கின் கூறினார்.

5 செ.மீற்றர் கிளை மிகவும் பெரிய பொருளாகையால் அது வாய் வழியாக விழுங்குவதோ அல்லது சுவாசக் குழாய் ஊடாக செல்வதோ சாத்தியமில்லை.

அவர் சிறிய விதையை உட்கொண்டிருக்க வேண்டும் என டாக்டர்கள் குறிப்பிட்டார்கள்.

சில உயிரியலாளர்கள் சிடாக்கின் கதையில் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள். ஒரு மரம் வளர்வதற்கு நல்ல தரை வளம், உரிய வெப்ப நிலை, நீர், காற்று மற்றும் சூரிய ஒளி தேவை. சில வளங்கள் இங்கு காணப்பட்டாலும் சூரிய ஒளியின்றி மரம் வளர்வது சாத்தியமில்லை என அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இருப்பினும் சடாக்கின் நுரையீரலில் இருந்து அகற்றப்பட்ட மரக்கிளைகளையும் அதனுடன் நீக்கிய நுரையீரல் பகுதியையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். விரைவில் முடிவு தெரியவரும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல