வாட்டிய இறைச்சியை விரும்பி உண்பதை வழக்கமாக கொண்டிருந்த பில் கிளின்டன் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார்.
2004 ஆம் ஆண்டு அவருக்கு இருதய சத்திர சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் திருமணம் செய்து கொண்ட தனது மகள் செல்சியாவின் வேண்டுகோளையேற்று, சைவ உணவு உண்ணும் வழக்கத்திற்கு பில் கிளின்டன் மாறியுள்ளார்.
“நான் தற்போது சைவ உணவை உண்பவனாக மாறி வருகிறேன். பருப்பு, அவரை, காய்கறிகள், பழங்கள் என்பவற்றையே உண்கின்றேன். வாதுமைக் கொட்டை பாலை அருந்துகிறேன். புரதச்சத்துள்ள மாக்களையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றேன்'' என பில் கிளின்டன் (64 வயது) தெரிவித்தார்.
கோழி, வான் கோழி இறைச்சிகளை உண்பதை முழுமையாக கைவிட்டுள்ளதாக தெரிவித்த பில் கிளின்டன், இடையிடையே சிறிதளவு மீனை மட்டும் உணவில் சேர்த்துக் கொள்வதாக கூறினார்.
சைவ உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பவர்களில் ஐந்தில் நான்கு பேர் இருதய நோய்களிலிருந்தும் கொழுப்பு சம்பந்தப் பட்ட பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டிருப்பதாக அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சைவ உணவு புற்று நோய், சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் என்பவற்றுக்கு தீர்வளிப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக