திங்கள், 11 அக்டோபர், 2010

பிரதமரின் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட சோப்

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் உடல் எடை அதிகமாக இருந்ததால் உடல் கொழுப்பை குறைப்பதற்காக ஆபரேஷன் சுவிட்சர்லாந்து நாட்டு ஆஸ்பத்திரியில் 2004-ம் ஆண்டு நடந்தது. அப்போது அவர் உடலில் இருந்து தேவையற்ற கொழுப்பு அகற்றப்பட்டது. இந்த கொழுப்பை ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் ஓவியர் கியான்னி மோட்டி என்பவருக்கு கொடுத்தார். அதை வைத்து அந்த ஓவியர் ஒரு சோப்பை தயாரித்து இருக்கிறார்.

அந்த சோப்பு, கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சி அடுத்த மாதம் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சோப் பிரதமரின் கொழுப்பில் இருந்து தான் தயாரிக்கப்பட்டது என்று ஓவியர் மோட்டி கூறியதும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பிரதமரின் கொழுப்பை யாருக்கும் கொடுக்கவில்லை என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்து உள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல