ஞாயிறு, 14 நவம்பர், 2010

18 குழந்தைகளை பிரசவித்து அமெரிக்க பெண் சாதனை (படங்கள் இணைப்பு)

அமெரிக்க தென்னஸி மாநிலத்தைச் சேர்ந்த கெல்லி பேட்ஸ் என்ற பெண்மணி 18 ஆவது குழந்தையை பிரசவித்து சாதனை படைத்துள்ளார்.
கெல்லிக்கும் (43 வயது) அவரது கணவரான ஜில்லுக்கும் (45 வயது) 23 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி முதல் 15 வருடங்களில் கெல்லி வருடாந்தம் அடுத்தடுத்து குழந்தைகளை பிரசவித்தார்.

ஜில் கெல்லி தம்பதிக்கு தற்போது 10 மகள்மாரும் 8 மகன்மாரும் உள்ளனர். மூத்தவரான சக்கிற்கு வயது 21 ஆகும்.

இப் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் காலை உணவின் போது மொத்தமாக 48 முட்டைகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி அதிகளவு குழந்தைகளைப் பெற்று சாதனை படைத்த கெல்லி விபரிக்கையில், ““நான் இளமையாக இருந்த கால கட்டத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பாது இருந்தேன். அச்சமயத்தில் வேலை ஒன்றைத் தேடிக் கொள்வதே எனது நோக்காக இருந்தது'' என்று தெரிவித்தார்.

அவர் மேலும் பல குழந்தைகளை பிரசவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல