ஞாயிறு, 14 நவம்பர், 2010

விட்ட இடத்தை பிடிக்கணும்

சமீபத்தில் ஒரு விழாவில் முக்கிய பிரமுகராக அழைக்கப்பட்டிருந்தார் சோனியா அகர்வால். அதாவது அழைப்பிதழில் இவருக்கு மட்டும் தனி அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது. ஏகப்பட்ட வி.விஐபிகள் பெயரை அதில் அச்சிட்டிருந்த இயக்குனர், இவர்களுடன் சோனியா அகர்வால் என்று அச்சிட்டிருந்தார் தனி நிறத்தில். இத்தனைக்கும் அந்த படத்தில் சோனியாவுக்கு சின்னதாக ஒரு கதாபாத்திரம் கூட தரப்படவில்லை.

அப்படியிருந்தும் ஏகப்பட்ட பில்டப்புகளோடு அழைத்தவர் முதல் வரிசையில் உட்கார வைக்காவிட்டால் எப்படியிருக்கும்? அப்படிதான் இருந்தது சோனியாவுக்கு. முதல் வரிசையை விட்டுவிட்டு பின் வரிசையில் உட்கார வைத்து விட்டார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். கோபித்துக் கொண்டாரா, அல்லது சங்கோஜமா தெரியவில்லை. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே, நைசாக கிளம்பிவிட்டார் சோனியா.

இப்போதெல்லாம் அவரது மனம் முக்கியத்துவம் தேடி அலைய ஆரம்பித்திருக்கிறது. அதன் விளைவாக அதிக சம்பளத்துடன் கிடைத்த டிவி சீரியல்களை கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். மீண்டும் இதே சினிமாவில் வெற்றிப்படி ஏற வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம், விருப்பம், கனவு, எல்லாமே.

கனவிழந்த கண்களுக்கு கலர் பூசவென்றே ஒருவர் இருக்கிறாரே, அவர் நடித்துக் கொண்டிருக்கும் வானம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சோனியா அகர்வால்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல