ஞாயிறு, 14 நவம்பர், 2010

பணிப்பெண் டி.எம்.ஷாந்தனி நாளை மறுதினம் நாடுதிரும்புகிறார்

ஜோர்தானில் பல்வேறு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பொலன்னறுவை மனம்பிட்டியவைச் சேர்ந்த பணிப்பெண் டி.எம்.ஷாந்தனி நாளை மறுதினம் நாடுதிரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 13 ம் திகதி தெமடகொட பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் ஊடாக ஷாந்தனி ஜோர்தான் சென்றிருந்தார்.

பின்னர் சுகவீனமுற்ற அவர், பணிபுரிந்த வீட்டு உரிமையாளர்களிடம் நோய் குணமாகுவதற்கு உபாதை ஒழிப்பு மருந்தை கோரியுள்ளார். அதன்போது அவருக்கு வீட்டு உரிமையாளர்களால் ஆணிகள் போடப்பட்ட தண்ணீர் குவளையொன்று வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாளை மறுதினம் அவர் நாடுதிரும்பவுள்ளமையை இட்டு ஷாந்தனியின் உறவினர்களும், அயலவர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல