இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது, விநாயகம் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு பல தடவைகள் உறுதிப்படுத்திய போதும் அவரின் சடலம் கைப்பற்றப்படவில்லை. கிளிநொச்சி வீழ்ச்சியடைந்த பின்னர் தமது கொல்லப்பட்ட தளபதிகளையோ அல்லது போராளிகளையோ விடு தலைப்புலிகள் அமைப்பு உத்தி யோகபூர்வமாக அறிவிப்பதையும் நிறுத்திவிட்டது. எனவே குழப்பமான நிலையே போரின் இறுதி நாட்களில் ஏற்பட்டன. சாலைப் பகுதியை 55ஆவது படையணி கைப்பற்ற முன்னரே விடுதலைப் புலிகளின் ஒரு குழுவினர் விநாயகம் தலைமையில் வெளிநாடு ஒன்றுக்குச் சென்று விட்டனர்.
அதற்கான உத்தரவை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனும் புலனாய் வுத்துறைத் தலைவர் பொட்டு அம்மானுமே மேற்கொண்டிருந்தனர்.ஆனால் விநாயகத்தின் சந்தேக பெயரான மைல் போஃர் எனப்படும் தொலைத் தொடர்பு உரையாடலை தொடர்ந்த வண்ணம் விடுதலைப் புலிகள் படையினரை ஏமாற்றியிருக்கின்றனர் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக