ஞாயிறு, 14 நவம்பர், 2010

புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு மாத்திரம் அரசு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் போதுமானதா?

புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் போராளி குழுக்கள் தொடர்பில் அரசாங்கம் உதாசீனமான போக்கைப் பின்பற்றி வருவதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக யுத்தம் நிறைவடைந்தன் பின்னர் தமது ஆதரவாளர்கள் முற்று முழதாக நிராகரிக்கப்பட்டு வருவதாகவும் இது ஆபத்தான நிலைமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளில் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக தொழிற்பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்பு போன்றவற்றை வழங்குவதில் ஏனைய தமிழ் போராளி குழு உறுப்பினர்கள் ஓரம் கட்டப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை அமைப்புக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

ஏனைய தமிழ் போராளி குழு உறுப்பினர்களில் பலர் வேலையில்லாப் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை தாம் எதிர்க்கவில்லை என்ற போதிலும், ஏனையவர்கள் உதாசீனம் செய்யப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக கொலைகள் மற்றும் கடத்தல்கள் இடம்பெற்றுவருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை,பத்மநாபா- ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பைச் சேர்ந்த அதிகளவான உறுப்பினர்கள் இந்தியாவில் அகதி முகாம்களில் தங்கியிருப்பதாக வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல