ஐரோப்பிய நாடுகளில் வாழும் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட முதலாவது இணையத்தள வானொலியான தமிழ் பிளாஸ் எப்.எம். இன் முதலாவது கலையகம் 2008ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் அலுவலகங்கள் திறக்கப்பட்டன.
ஐரோப்பாவிலேயே பிறந்து வளர்ந்து வரும் இளைய தமிழ் சமுதாயத்தினரிடையே, செந்தமிழ்மொழியையும் தமிழர் தம் காலாசாரத்தையும் பேணி வளர்த்து வருவதில் இந்த வானொலிச் சேவைக்கு குறிப்பிட்டுக் கூறத்தக்க இடமுள்ளது.
அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ்த் தாகம் கொண்ட இளைஞர்களை தமிழ் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக்கிய இந்த இணைய வானொலி, தமிழ் மொழியைப் பேச முடியாதிருந்த மேலும் சிலருக்கு ஆழமான தமிழ் அறிவைப் போதித்த பின்னர் அவர்களை தமது சேவையில் இணைத் துக்கொண்டுள்ளது.
ஒலிபரப்புத் துறையிலும் நவீன தொழில் நுட்பம் பயன்பாட்டிலுள்ள இன்றைய காலகட்டத்தில் தமிழ்பிளாஸ் எவ்.எம்.வானொலியானது தமிழர்களை மகிழ்விக்கும் வகையிலான பல புதுமையான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகின்றது. ஸ்கைப் மூலமாக நேயர்கள் தொடர்புகொள்ளும் வகையிலமைந்த உங்கள் விருப்பம், கலாட்டா நேரம், நகைச்சுவை நேரம் போன்றன இவற்றுள் குறிப்பிடத்தக்கன.
வானொலி சேவையொன்றை ஆரம்பிப்பதும் அதனைக் கொண்டுநடாத்துவதும் நினைத்த மாத்திரத்தில் செய்துவிடக் கூடிய காரியமல்ல. ஆனால், அதனையும் தாண்டி இணையத்தள வானொலிச் சேவையொன்றை தொடர்ச்சியாக நடத்திச் செல்லும் தமிழ் இளைஞர்களது பணி பாராட்டுக்குரியது.
இணையதள முகவரி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக