ஞாயிறு, 14 நவம்பர், 2010

காயமடைந்த ஜே.வி.பி உறுப்பினர்களை நேரில் பார்வையிட்ட டக்ளஸ் தேவானந்தா

இனந்தெரியாத நபர்கள் நடாத்திய தாக்குதலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி உட்பட மூவர் பலத்த காயமடைந்து நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் உட்பட ஏனையோரை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காயப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுமாறு வைத்தியர்களைப் பணித்ததோடு தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதனை அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் தொடர்பில் 15 பேர் கைது

இச்சம்பவம் தொடர்பில் 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், விசாரணைகளை நடத்திச் செல்ல ஒரு வேறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல