ஞாயிறு, 14 நவம்பர், 2010

காணாமல்போனவர்களை விடுவிப்பதாக கூறி கப்பம் - கிளிநொச்சியில் நடந்த மோசடி நேற்று வெற்றிகரமாக முறியடிப்பு

இறுதி யுத்தத்தின்போது காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருகிறோம். நாங்கள் கேட்கும் பணத்தை தரவேண்டும் எனக் கோரி கிளிநொச்சிப் பகுதியில் மோசடியில் ஈடுபட்டவர்களின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று நடந்த இச்சம்பவம் கிளிநொச்சியை பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது. காணாமல் போனவர்களை கண்டு பிடித்து தருகிறோம் என்ற செய்தி கடந்த ஒரு வாரமாக தொலைபேசி எங்கும் பரவிக் கொண்டிருந்தது. குறித்த தொலைபேசி இலக்கம் வன்னியில் உள்ள பல மக்களின் கைகளுக்கு சென்றுள்ளன. மக்கள் இந்த இலக்கத்தை அழுத்தி தொடர்பு கொண்டு தங்கள் பிள்ளைகளையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிய பொழுது கவலைப்பட வேண் டாம். உங்கள் பிள்ளைகளை கொண்டு வந்து தருகிறோம் என்று கூறியிருக்கின்றனர்.

மிக மெளனமாக இந்த விடயத்தை கையாள வேண்டும் என்று மர்ம நபர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த விடயத்தை வெளியில் சொன்னால் உங்களுக்கு பிள்ளைகள் கிடைக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என குறித்த மர்ம நபர்கள் அச்சுறுத்தியிருக்கிறார்கள். நாங்கள் யாரிடமும் சொல்ல மாட்டோம். எங்கள் பிள்ளைகளை எங்களுக்குத் தாருங்கள் என்று மன்றாடியிருக்கிறார்கள்.

மேஜர் மதியழகன், மேஜர் சீலன் என்ற பெயரில் இந்த மர்ம நபர்கள் தம்மை மக்களிடம் தொலைபேசியில் அடையாளப்படுத்தியுள்ளனர். இறுதி யுத்தத்தில் காணாமல்போன போராளிகள், பொதுசனங்கள் என 5 ஆயிரம் பேருக்கு மேல் தம்மிடம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். மக்கள் தொலைபேசியில் பேசும் பொழுது தொடர்பில் இருங்கள் பார்த்துச் சொல்கிறோம் என்று விட்டு, உங்கள் உறவு உயிருடன் உள்ளார்; நீங்கள் பணத்துடன் வாருங்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலம் என்று பாடசாலைக்கு பணத்துடன் வரும்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் அறிவிக்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மக்கள் பலர் கனகபுரம் பாடசாலைக்கு பணத்துடன் வந்துள்ளார்கள். மர்ம நபர்கள் பாடசாலை அதிபருக்கும் குறித்த சம்பவத்தை அறிவித்து பாடசாலையில் நடத்த அனுமதி கேட்டுள்ளார்கள். தங்கள் பிள்ளைகள் விடுவிக்கப்படப் போகிறார்கள் என்ற பெற்றோ ரின் கோரிக்கையாலும் அதிபர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.ஆனால் தொடர்ந்து நடந்த உரையாடல்களும் சம்பவங்களும் சந்தேகத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பாடசாலை அதிபர் சேதுபதி படைத் தரப்பிற்கு குறித்த விடயத்தை அறிவித்ததாக தெரிவித்தார்.

அதேவேளை இப்படியயாரு சம்பவம் நடைபெறுகிறது என்பதை தாம் மிக இரகசியமாக பொலிஸாருக்கும் படையினருக்கும் அறிவித்த தாக மக்கள் தெரிவித்தார்கள்.இதனை அடுத்து நேற்று முதல் கனகபுரம் பாடசாலை பொலிஸாரின் கணகாணிப்பில் இருந்து வந்துள்ளது. குறித்த மர்ம நபரின் முகவர்கள் நேற்று கனகபுரம் மகாவித்தியாலயத் திற்கு வந்த பொழுது பொது மக்களின் வேடத்தில் நின்ற பொலிஸார் அவர்களை வளைத்துப் பிடித்துள்ளனர்.

எனினும் மோசடியை நடத்திய குறித்த நபர் பிடிபடவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. முகவர்களாக இயங்கிய மூன்று பேர் இதுவரை யில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இம் மோசடியில் சிலரின் பணம் பறிபோயுள்ளது. இந்த நபர்கள் வீடுகளுக்குச் சென்றும் மக்களிடமிருந்து பணத்தை வாங்கியுள்ளனர் என்றும் தெரிய வருகிறது.

ஐம்பதாயிரம் முதல் மூன்று இலட்சம் வரையான பணம் இப்படி அப கரிக்கப்பட்டுள்ளது. இம் மோசடி சம்பவம் தொடர் பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல