ஞாயிறு, 14 நவம்பர், 2010

ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் கடுமையான தாக்குதல்

ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் இனம்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் மற்றும் சிரேஸ்ஸ்ட விரிவுரையாளர் சிதம்பரநாதன் ஆகியோர் மயிரிழையில் தப்பியுள்ளனர்:

இன்று இரவு கந்தர் மடம் பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் அலுவலகத்தில் ஜே.வீ.பியின் முக்கியஸ்த்தர்கள் உரையாடிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுனில்ஹந்தும்நெத்தி உள்ளிட்ட நால்வர் யாழ் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணமால் போனவர்கள் தொடர்பில் நாம் இலய்கையர் அமைப்பு நாளைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த இருந்தது. இதற்கு காணாமல் போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தின் ஆதரவு உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் ஆதரவை இந்த அமைப்பு வேண்டியிருந்தது என செய்தியாளர் கூறியுள்ளார். இது குறித்து கலந்துரையாடுவதற்கு பத்மினி சிதம்பரநாதனின் அலுவலகத்திற்கு ஜேவீபீ தரப்பினர் சென்றுள்ளனர். இங்கு நட்பு ரீதியாக பத்மினி மற்றும் கணவர் சிதம்பரநாதன் ஆகியோருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது 6ற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பத்மினி மற்றும் சிதம்பரநாதன் ஆகியோர் ஓடி கதவொன்றை பூட்டி இதில் இருந்து தப்பித்துக்கொண்டனர். எனினும் தான் நாடாளுமன்ற உறுப்பினர் என அறிமுகப்படுத்திய போதிலும் தலையில் பலமாகத் தாக்கப்பட்டதுடன் அவரது உதவியாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் படுகாயம் அடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல