குருதிப் புற்றுநோயால் 20 வருடங்களுக்கு மேலாக துன்பப்பட்டு வந்த ஜில் கிளேபேர்க், கனக்கட்டிலுள்ள தனது இல்லத்தில் மரணமானதாக கூறப்படுகிறது.
1978 ஆம் ஆண்டு வெளிவந்த “அன் அன்மறீட் வுமன்' 1979 ஆம் ஆண்டில் வெளி வந்த “ஸ்ராட்டிங் ஓவர்' திரைப்படங்களில் சிறப்பாக நடித்தமைக்காக அவர் ஒஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டார்.
“அன் அன்மறீட் வுமன்' திரைப்படத்துக்காக அவர் கான்ஸ் திரைப்பட விழாவில் மிகச் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.
அத்துடன், அவர் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தொலைக்காட்சித் திரைப்படமான “ஹஸ்ட்லிங்' மற்றும் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த “நிப் டக்' ஆகியவற்றுக்காக “எம்மி' விருதுக்கு சிபார்சு செய்யப்பட்டார்.
அவர் “டேர்ட்டி செக்ஸி மணி' மற்றும் “அலி மக்பீல்' ஆகிய தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
அவர் இறுதியாக நடித்த “பிறைட் மெயிட்ஸ்“ திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக