திங்கள், 8 நவம்பர், 2010

உலகத்தை மாற்றியமைத்தவர் காந்தி அடிகள்

உலகத்தையே மாற்றியமைத்த பிதாமகன் காந்தியடிகள் என, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அரிய நினைவுப் பரிசு ஒன்றையும் நினைவிடத்திற்கு அளித்தார். மார்ட்டின் லூதர் கிங் நினைவிடம் கட்டப் பயன்படுத்தப்பட்ட கல்தான் அந்த நினைவுப் பரிசு என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒபாமாவின் மானசீக குருக்கள் இருவர், ஒருவர் மார்ட்டின் லூதர் கிங், இன்னொருவர் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. மார்ட்டின் லூதர் கிங் பிறந்த பூமியிலிருந்து காந்தி பிறந்த பூமிக்கு வந்துள்ள ஒபாமா, காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டிற்கு இன்று காலை சென்றபோது மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

அங்கு உரையாற்றிய அவர், உலகத்தையே மாற்றியமைத்த பிதாமகன் காந்தியடிகள். அவர் போதித்த அமைதி, சகிப்புத்தன்மை, பிறர் மீது அன்பு காட்டுவது ஆகியவை மிக உயர்ந்த தத்துவங்கள். அவற்றைப் போதித்த அந்த ஆத்மாவை எப்போதும் நாங்கள் நினைவு கூருவோம் என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல