21 வயது வயதான இந்த நபர் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸ் புலனாய்வாளர் போல் மெல்கம் இது குறித்து தெரிவிக்கையில் 'பச்சை குத்திக்கொள்ள விரும்பிய 25 வயதுடைய இளைஞன் பச்சைக் குத்துபவரின் வீட்டிற்குச் சென்று உரையாடிக்கொண்டிருந்தபோது பச்சை குத்துவது தொடர்பான விடயமும் அதில் இடம்பெற்றது.
பச்சைக் குத்திக்கொள்ள விரும்பிய இளைஞன் முதலில் தனக்கு ' யின் அன்ட் யாங் ' சின்னத்தையும் ட்ரகனின் உருவத்தையும் பச்சையாக குத்துமாறு கேட்டுள்ளார்.
பச்சைக்குத்துபவர் இளைஞனின் முதுகில் பச்சைக் குத்துவதற்கு ஆரம்பித்தார். அங்கிருந்த இன்னொருவர் மேற்படி குத்துவதை அவதானித்து, பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது என்று உற்சாகமூட்டிக்கொண்டிருந்தார்.
பச்சை குத்தி முடிந்ததும் வெயிலில் திரிய வேண்டாம் எனவும் சில நாட்களுக்கு முதுகை மற்றவர்களுக்கு காட்ட வேண்டாம் எனவும் பச்சை குத்துபவர் கூறியுள்ளார்.
பச்சைக் குத்திக் கொண்ட நபர் வீட்டிற்குச் சென்று தனது துணைவியிடம் தான் பச்சைக் குத்திக்கொண்டதை காட்டியுள்ளார். அப்பெண் நீ விரும்பியதுதான் இங்கு பச்சையாக குத்தப்பட்டுள்ளது என்று நான் நினைக்கவில்லை' என்று கூறினாராம்.
அப்போதுதான் மேற்படி இளைஞனுக்கு தனது முதுகில் இப்படி பச்சை குத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அத்துடன் ' நான் ஓரின சேர்க்கையாளர் ' எனவும் எழுத்துப்பிழைகளுடன் பச்சையாக குத்தப்பட்டிருந்ததாம்.
அதையடுத்து பாதிக்கப்பட்டவர் பொலிஸில் புகார்செய்தார். இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக