திங்கள், 8 நவம்பர், 2010

சிறுவனின் தொண்டைக்குள் சிக்கியிருந்த கத்திரிக்கோல்

இருமும் போது இரத்தம் வெளியேறுவதாக குறிப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுவனின் தொண்டையில் கத்தரிக்கோ லொன்று இருப்பதை கண்டறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

மூளை வளர்ச்சியில் குறைபாடுள்ள கோர்டியஸ் பிரான்சிஸ் என்ற இந்த சிறுவன் அவனது தாயாரான கரொன் எட்வார்ட் (50 வயது) வீட்டுவேலையில் ஆழ்ந்திருந்த போது கத்திரிக்கோல் ஒன்றுடன் விளையாடியுள்ளான்.

இதன் போது அவன் கத்திக் கோலை தவறுதலாக விழுங்கியுள்ளான். இதனையடுத்து அவனுக்கு கடும் இருமல் ஏற்பட்டதுடன் இரும் போது குருதியும் வெளியேறியுள்ளது.

தனது மகன் பேனா மூடி யொன்றையே விழுங்கியதாக நினைத்த கரொன், மகனை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

மருத்துவர்கள் சிறுவனின் தொண்டையை “எக்ஸ்ரே' படம் எடுத்துப் பார்த்த போது சிறுவனின் தொண்டைக்குள் கத்திக்கோல் ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சிறிய சத்திர சிகிச்சையொன்றை மேற்கொண்டு மருத்துவர்கள் சிறுவனின் கழுத்திலிருந்த கத்திக்கோலை அகற்றியுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல