திங்கள், 8 நவம்பர், 2010

மும்பை பள்ளிக் குழந்தைகளுடன் நடனமாடிய ஒபாமா-மிஷெல் (படங்கள், காணொளி இணைப்பு)

மும்பை ஹோலி நேம் பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் தீபாவளி கொண்டாடிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிஷெலும் குழந்தைகளுடன் சேர்ந்து நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

மும்பை வந்து சேர்ந்த ஒபாமா பள்ளிக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினார். முதலில் தீபங்களை ஏற்றிய ஒபாமா தம்பதி பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

மகாராஷ்டிர மீனவர்களின் நாட்டுப்புறப் பாடலுக்கு குழந்தைகள் 'கோலி' நடனமாடியபோது, ஒபாமாவின் மனைவி மிஷெலும் அவர்களுடன் இணைந்து நடனமாட ஆரம்பித்தார்.

இதைக் கைத் தட்டி ரசித்துக் கொண்டிருந்த ஒபாமாவையும் குழந்தைகள் சிலர் கையைப் பிடித்து இழுத்து நடனமாட அழைக்கவே, சிறிதும் யோசிக்காமல் அவர்களுடன் இணைந்து நடனமாடி அசத்தினார் ஒபாமா.

மும்பை பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட மிஷெல், ரங் தே பாசந்தி படத்தின் பாடலுக்கு அவர்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல