செவ்வாய், 23 நவம்பர், 2010

மாதவிடாய் கோளாறுகளும் ஹோமியோபதி மருத்துவ முறைகளும்

மாதவிடாய் சம்பந்தமாக ஏற்படுகின்ற நோய்கள் பல இருக்கின்றன. அவைகள்....

மாதவிடாய் காணாதிருப்பதும், வலியோடு மாதவிடாய், ஏராளமாக போக்கு, வெள்ளை போதல் ஆகிய இவைகளே.

மாதவிடாய் காணாமல் இருப்பது

சீதோஷ்ண ஸ்திதியில் அதிக வித்தியாசமுள்ள ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறுவதால் சில மாதர்களுக்கு மாதவிடாய் நின்று விடும். நோயுள்ள போதும் மாதவிடாய் மறைந்து விடலாம். அஸ்திஜூரம் ஸ்கார்லெட் ஜூரம், முதலிய நோய்களால் மாதவிடாய் தோன்றாமலிருக்கலாம். இது உடல் நலத்திற்கு அவசியமாகையால் கவலைப்பட வேண்டியதில்லை. உடல் ஆரோக்கியமானதும் மீண்டும் தோன்றும்.

மாதவிடாய் பெரும் போக்கு
இதற்கு பல காரணங்கள் உண்டு. கருப்பைக்குள் உண்டான நோயால் மாதவிடாய் பெரும் போக்காக ஏற்படலாம். இது சாதாரணமாக குழந்தை பிறந்த உடனேயும், அல்லது கர்ப்பம் கலைந்த போதும் நஞ்சின் சிறு பகுதிகள் கருப்பையில் நின்று விடுவதாலும், கருப்பையின் துவாரம் கிழிபட்டு போவதாலும் உண்டாகிறது. பிரசவ காலங்களில் அஜாக்கிரதையாக அசுத்தமான பொருட்களை உபயோகிப்பதாலும், மாதவிடாய் காலங்களில் அழுக்கான துணிகளை உபயோகிப்பதாலும் கிருமிகள் கருப்பையினுள் பிரவேசித்து நோயை உண்டாக்கலாம். இந்த விதமாக கருப்பைக்கு நோய் உண்டாக்கும் போது மாதவிடாய் போக்கு ஏராளமாக இருப்பதுடன் வலியும் உண்டாகிறது.

வலியோடு கூடிய மாதவிடாய்
சாதாரணமாக மாதவிடாய் சிறிது அசவுகரியம் ஏற்படுவதுண்டு. ஆனால் வலியிருக்குமானால் ஏதோ நோய் இருக்கிறது என்று அறியவும், மேற்குறிப்பிட்டது மாதவிடாய் அதிகம் போகும் போது வலியும் அதோடு உண்டாகிறது. வலியோடு கூடிய மாதவிடாய்களில் முதுகுவலி, விலாக்களிலும் வலியிருக்கலாம். சில சமயம் அடி வயிற்றின் மேலே பாரம் வைத்தாற்போல் உணர்ச்சியும் உண்டு அல்லது கருப்பையை சுற்றிய இடங்களில் பொறுக்க முடியாத வலியிருக்கலாம். இவை விட்டு விட்டு வரும்.

சிகிச்சைக்கான மருந்துகள்
1. அகேரிஸ் _ மாதவிடாய் நின்ற பின் கருப்பை நழுவுதல், முழுவதும் அடிவயிற்றில் அழுத்தும் வலியுடன் அதிகமான மாதவிடாய், மாதவிடாய் சமயத்தில் பல்வலி, குறிகளில் அரிப்பு.

2. அக்டியா ரஸிமோசா துரித மாதவிடாய், ஏராளமான கட்டி தட்டிய போக்கு, வலி மாதவிடாய், குறைந்த கொஞ்சமான போக்கு, அடி வயிற்றில் குறுக்கே வலி, மாதவிடாயின் இடைக்காலத்தில் சிறிய போக்கு, வாத சம்பந்தமான வலி, காக்கை வலிப்பு, சங்காதோஷம், கருப்பையில் கனத்த உணர்ச்சி பட்ட இடங்களில் தோலுரியும் வெள்ளைப்பாடு.

3. அலெட்ரிஸ் பாரினோஸா ஜன்னேந்திரியம். கருப்பை சக்தி குறைவு, ரத்தசோகை, வெள்ளைப்பாடு, அடிக்கடி கருச்சிதைவுகள், மலட்டுத்தனம், அதிக துரிதமாக அதிகமாக பிரசவ வேதனையை ஒத்த வலியுள்ள மாதவிடாய், ஞிண்ட கால நோயால் அல்லது சத்துள்ள உணவு உண்ணாததால் ஸ்தீரிகளுக்கு ஏற்படும் பலவீனம்.

4. ஆர்சானிக் ஆல்பம். அதிக மஞ்சள், கெட்டி காரமுள்ள வெள்ளைப்பாடு, யோனி உதடு வீக்கம், வலது சினைப்பையில் எரிச்சல், ரத்தசோகை உள்ள ஸ்திரிகளுக்கு அதிவிரைவாக அதிக மாதவிடாய், மாதவிடாயின் போது மலப்பையில் தைக்கும் வலி.

5. காக்குலஸ். 15 நாட்களுக்கு ஒரு முறையும், ஏராளமாகவும் இருக்கும். மாதவிடாயின் போது அதிக பலவீனம். அடிவயிற்றில் அதிக வலி. அசைவாலும், சுவாசம் விடுவதாலும் அதிகமாதல், மாதவிடாய்க்கு பதில் வெள்ளைப்பாடு தோன்றுதல், அல்லது இடைக்காலத்தில் அதிக வெள்ளைப்பாடு, மாதவிடாய் தடைபட்டால் ஏற்பட்ட புத்தி மாறாட்டம்.

6. கால்பாஸ். அதிக தாமதம், மிக குறைவான போக்குக்கு கொடுக்க வேண்டிய மருந்து.

7. நக்ஸ்வாமிகா. அதிக சீக்கிரம், அடிக்கடி வாரத்திற்கு ஒரு முறை, அதிக நாள் ஞிடித்திருத்தல், கருத்த போக்கு, வலியுடன் கெண்டையேறுதல், காலையில் குமட்டல், குளிர் மயக்கம், ஞிர்ப்பை மலப்பை கீழ் அமுக்கும் வலி, அதிக உழைப்பினால் பாரமான சுமையை தூக்குவதால் யோனி வெளித்தள்ளுதல், வலியுள்ள மாதவிடாய் இடுப்பிலும், விலாவிலும் வலியுடன் அடிக்கடி மலம் போதல்.

8. பல்ஸ்டில்லா. இம்மருந்து கொடுப்பதற்கு முன் மனக்குறியை முக்கியமாக கவனிக்க வேண்டும். நோயாளி பணிந்த சுபாவமும், அடக்க குணமும் உள்ளவராக இருப்பதுடன், எடுத்ததற்கெல்லாம் அழுவார். தன் உடம்பு என்ன செய்கிறது என்று அவரால் சொல்ல முடியாத அளவுக்கு துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டிருக்கும். வலி ஒரே இடத்தில் நிலைத்து நிற்காது. ஒரு சமயம் வலது பக்கம், மறு சமயம் இடது பக்கம், அடுத்த சமயம் நடுவில் இவ்விதம் மாறிக் கொண்டே இருக்கும். வலியை போலவே போக்கும் ஒரு சமயம் ஏராளமாய் வெளியாகும். மறு சமயம் உடனே நின்று விடும். மாதவிடாய் காலத்திலோ அல்லது பிறகோ வயிற்றுப் போக்கு தோன்றும் போக்கு கொஞ்சமாகவும், கெட்டியாகவும், கறுப்பு நிறமாகவும், கட்டிகளுடன் அடிக்கடி மாறிக் கொண்டு வெளியாகும். அடி வயிற்றில் அதிக கனம், வலி, குமட்டல், சில்லிப்பு, முதுகில் வலி, மாதவிடாய் சமயங்களில் வலி தோன்றுதல், வாயில் கசப்பு, விசேஷமாக விடியற்காலையில் வாய் காய்ந்திருந்தாலும், தாகம் இல்லாமல் இருப்பது இம்மருந்தின் பிரதான குறி.

போக்கு ஆரம்பமாகும் போது குளிர்ந்த தண்ணீரில் காலை நனைத்ததினால் தடைபடும் போக்கை மறுபடி வெளிப்படுத்த பல்ஸ்டில்லா தேவைப்படும். மாலையில் சில்லென்று குளிரும் உணர்ச்சி இருந்தாலும், குளிர்காற்று வீசும் இடங்களில் இருந்தாலும் குளிர்ந்த வஸ்துக்களாலும் வியாதியஸ்தர்களுக்கு சவுகரியம் ஏற்படுவதுடன் சூடான இடங்களில் இருந்தாலும் சூடான வஸ்துக்களாலும் அசவுகரியம் ஏற்படுவது வினோதமாய் காணப்படும். மற்றொரு முக்கிய குறி. உடம்பில் பலம் குன்றி ரத்தசோகை பிடித்துள்ள பெண்களுக்கு பல்ஸடில்லா சிறந்தது. மாதவிடாய் அழுக்கப்பட்டிருந்தால் யோனி சிறுத்து கறடுதட்டுதல், சிறு பெண்களுக்கு மாதவிடாய் அழுக்கப்பட்டு ரத்த சோகை ஏற்படும். மாதவிடாய் கோளாறு சம்பந்தப்பட்ட எல்லா நோய்களுக்கும் இம்மருந்து சிறந்தது.

9. பெல்லடோன்னர். அதிக சிவந்த கட்டி தட்டிய சூடான நாற்றமுள்ள ரத்தப் போக்கு, மாதவிடாய் காலங்களின் இடையில் மாதவிடாய் கோளாறுகளுடன் பிரசவ வலி போன்ற வலிகள் திடீரென தோன்றி நிற்றல்.

10. ப்ளாட்டினா. அதிக சீக்கிரம் ஏராளமான கருப்பு, கட்டி கட்டியான போக்கு, கீழை அழுத்தும் வலி, குளிருடன் இருத்தல்.

11. மெக்னீஷியம் பாஸ். மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி, சதையை பிய்த்து வைக்கும் மாதவிடாய்.

12. ரஸ்டாக்ஸ். அதிக சீக்கிரம், ஏராளம், ஞிடித்திருத்தல், பிரசவ வலிகளை ஒத்த வலியுடன் காரமுள்ள ஞிர்ப் போன்ற மாதவிடாய் போக்கு.

13. வெராட்ரம் ஆல்பம். மாதவிடாய்க்கு முன் அதிக கால இச்சை, மாதவிடாய் அதிக சீக்கிரம், ஏராளம் அல்லது போக்கே ஏற்படாமை, மாதவிடாய் தடைப்பட்டிருக்கும் போது தலைவலி, முகம் வெளுத்தல், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, கருப்பை வெளித்தள்ளுதலுடன் வலியுடன் கூடிய மாதவிடாய் காலங்களில் சரீரம் குளிர்ந்து விடல்.

14. சல்பர் மிகத்தாமதம். மிக குறைவு, அல்லது அழுக்கப்படல் அல்லது விட்டு விட்டு இருத்தல், கறுத்த கெட்டியான புளிப்பு நாற்றமான பட்ட இடத்தில் எரிச்சல், ரணத்தை உண்டாக்குவதற்கான ரத்தம் வெளியேற்படல், இரண்டு நாளைக்கு போக்கு இருந்து விட்டு திடீரென நின்று விடும். யோனியில் எரிச்சல், மயக்கம் வருவது போல் இருத்தல், மாதவிடாய்க்கு முன் தலைவலி, மாதவிடாய்க்கு பின் காரமான வெள்ளைப்பாடு, மாதவிடாய் தானாக நின்று விடும் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பலவித கோளாறுகளுக்கு உபயோகப்படும்.

15. ஸெபியா. மாதவிடாய் ஆகாமை. வலியுடன் மாதவிடாய், தாமதப்பட்ட மாதவிடாய், மிக குறைவான மாதவிடாய், காலை நேரத்தில் மட்டும் போக்கு, மாதவிடாய் போக்கு குறைவாகி அதனால் ஏற்படும் தலைவலி.


பரிகாரம்
நல்ல சத்துள்ள ஆகாரங்களை வேளாவேளைக்கு உட்கொள்ள வேண்டும். மாதப் போக்கு போகும் காலங்களில் உடல் நிலையை நன்கு கவனித்து சுத்தமாக இருக்க வேண்டும். அதோடு அதிக வேலை செய்யாமல் ஓய்வு எடுத்து கொள்ளவும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல