அங் சான் சுகி, தமது மகனை ரங்கூன் வானூர்தி நிலையத்துக்கு சென்று வரவேற்றார்
பிரித்தானியாவில் வசித்து வந்த அங் சான் சுகியின் இளைய மகன், கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதியன்று தாய் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் தாய்லாந்தின் ஊடாக மியன்மாருக்கு வரமுயற்சித்தார்
எனினும் மியன்மார் அரசாங்கம், தற்போதே அவருக்கான வீசாவை வழங்கியுள்ளது
கடந்த 21 வருடங்களில் அங் சான் சுகி பெரும்பாலான வருடங்களில் இராணுவ அரசாங்கத்தினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார் இறுதியாக 2000 ஆம் ஆண்டு அங் சான் சுகி, தமது இளைய மகனான அரிஸை சந்தித்தார்
அதன் பின்னர் மியன்மார் அரசாங்கம், அரிஸ_க்கு நாட்டுக்குள் வர அனுமதி வழங்கவில்லை
இந்தநிலையில் தாய்லாந்தில் உள்ள பிரித்தானிய தூதரகம், அரிஸின் மியன்மாருக்கான விஜயம், தனிப்பட்ட விஜயமே தவிர, அரசியல் நோக்கம் கொண்டதல்ல எனக்குறிப்பிட்டுள்ளது.
எனினும் மியன்மார் தகவல்களின்படி, அரிஸ் மீது, மியன்மார் மக்கள், நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக