செவ்வாய், 23 நவம்பர், 2010

காமிக் புத்தகத்தில் கர்லா கவர்ச்சி படம்

பிரான்ஸின் முதல் பெண்மணி கர்லா புருனியின் திறந்த முதுகுடன் காணப்படும் போட்டோ காமிக் புத்தகத்தின் அட்டையில் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் மனைவி கர்லா புருனி. இவர் முன்னாள் மாடல் அழகி, பாடகி. சமீபத்தில் குழந்தைகள் படிக்கும் காமிக் புத்தகத்தின் அட்டையில் கவுன் அணிந்த இவரது போட்டோ வெளியாகி இருந்தது.

‘காமிக் புத்தக தொடரின் ஒரு பகுதியாக புருனி, சர்கோசியின் கதையும் இணைக்கப்பட்டுள்ளது. பெண்கள் அதிகாரத்தை வெளிப்படுத்தும் வகையில் புருனியின் போட்டோ வெளியாகி உள்ளது.

குறிக்கோளுடன் செயல்படுபவர் புருனி

இதை படிப்பவர்களுக்கு, நம்மாலும் சாதிக்க முடியும் என்ற உணர்வும், நாம் என்னவாக வேண்டும் என்று முடிவு எடுக்கும் தைரியத்தையும் அளிக்கும். காமிக் புத்தக அட்டையில் இடம் பெற்ற போட்டோ மூலம் என்றும் அழியாத புகழை புருனி பெற்றுள்ளார்’ என்று காமிக் புத்தகம் வெளியிட்ட புளூவாட்டர் புத்தக வெளியீட்டாளர் டேர்ரன் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல